பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை முதல் நாட்டிலுள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் அதிக மக்கள் கூட்டம் காணப்படுகிறது.
சுகாதார அதிகாரிகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியும், பொதுமக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. வீதிகளில் மடை திறந்த வெள்ளம் போல, வாகனங்கள் புகுந்தன.
பொதுப்போக்குவரத்து சேவைகளும், அதில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தாலும், வீதிகளில் வாகன, மக்கள் நெரிசல் காணப்பட்டது.
அத்தியாவசிய நடவடிக்கைகளுக்காக மட்டுமே வீடுகளை விட்டு வெளியேறும்படி மக்களை கேட்டுக் கொண்டிருந்த போதும், மக்கள் நடமாட்டம் மிக அதிகமாக இருந்தது.
ஒரு மாதமாக அமுலில் இருந்த பயணக்கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை 4 மணி முதல் நீக்கப்பட்டதை தொடர்ந்து, காலையிலேயே நடமாட்டம் அதிகரித்தது.
பயணக் கட்டுப்பாடுகள் புதன்கிழமை இரவு 10 மணிக்கு மீண்டும் விதிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு விலக்கப்படும்.