24.7 C
Jaffna
December 16, 2024
Pagetamil
இந்தியா

விவாகரத்தான பெண்களை திருமணம் செய்வதாக கூறி குறி வைக்கும் தொழிலதிபர் : வழக்குப்பதிவு செய்ய தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு!

விவாகரத்தான பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்த ஆனந்த் சர்மா மீது போலீசார் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.

கோவை பீளமேட்டில் வசிக்கின்ற தனலட்சுமி என்பவர் வெளிநாட்டில் பணிபுரிந்து இந்தியா திரும்பியவர். கணவனை பிரிந்து மூன்று குழந்தைகளுடன் வசிக்கின்ற தனலட்சுமிக்கு தொழில் ஆர்வம் அதிகமானதால் அதன் விவரங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார்.

அவரை தொழில் ரீதியாக தொடர்பு கொண்ட ஆனந்த் சர்மா அவருடன் நெருக்கமாக பழகினார். ஆனந்த நட்புடன் பழக தனலட்சுமி கணவரை பிரிந்ததனை சாதகமாக்கி தானும் மனைவியை பிரிந்தவரென நெருக்கமாக பழகியிருக்கின்றார்.

இதனடையே ஆனந்த நட்பு தனலட்சுமிக்கு நல்ல ஆறுதலாக தெரிந்தவுடன் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். ஆனந்த் தனலட்சுமி இருவரும் தொழில் ரீதியாக வெளியூருக்கு சென்ற நிலையில் திருமணம் செய்வதாக கூறி எல்லை மீறியுள்ளார் ஆனந்த்.

தனலட்சுமி, ஆனந்தின் வார்த்தையினை நம்பி ஆனந்திடம் ஏமாந்தார். இதனை அடுத்து ஆனந்தை அலைபேசி அழைப்பு திரட்டிய தனலட்சுமி திருமணமாகி தனித்த விவாகரத்தான பெண்களை ஏமாற்றி உல்லாசமாக வாழ்ந்தது தெரியவந்தது.

இதனை புகாராக கோவை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் புகாரை ஏற்க கால தாமதமானதால் மகளிர் ஆணையத்தில் தனலட்சுமி புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்த தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்தது.

இதனை அடுத்து கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனலட்சுமி தந்த புகாரின் அடிப்படையில் கற்பழிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு

Pagetamil

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

நடைபயிற்சிக்கு தனியாக சென்ற மனைவிக்கு முத்தலாக்

Pagetamil

‘பொன்வேலின் முதல் ஓட்டு விஜய்க்கே!’ – மொத்தமாக தவெக-வில் கலந்த மாரி செல்வராஜின் ‘வாழை’ கிராமம்

Pagetamil

Leave a Comment