நிவாரணம் வழங்குவதை போல சூட்டிங்; திருகோணமலை பாகுபலி வீடியாவால் சர்ச்சை!

Date:

திருகோணமலையில்  நிவாரணம் வழங்குவதை போல, படமாக்கி, டிக்டொக்கில் வெளியிட்ட ஒருவர் பற்றிய காணொளி வைரலாகியுள்ளது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தொடர்புடைய பேஸ்புக் பிரபலம் ஒருவரே சர்ச்சையாகியுள்ளார்.

அவர் அண்மையில் டிக்ரொக்கில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். பாகுபலி படத்தில் வந்த பாடலொன்றில் இடம்பெற்ற, “யாரு இவன்? யாரு இவன்? கல்லைத் தூக்கிப் போறானே, புள்ள போல தோளு மேல உன்னைத் தூக்கிப் போறானே“ என்ற வரிகளை சேர்த்து, அதில் தனது தோளில் பொருட்களை அடுக்கி, நிவாரணம் வழங்க செல்பவரை போல இடம்பெறும் காணொளிகளை வெளியிட்டிருந்தார்.

எனினும், அது நிவாரண பணியின் போது எடுக்கவில்லை, தனி சூட்டிங் மூலம் எடுக்கப்பட்டது என ஒரு சிசிரிவி காணொளி வெளியாகியுள்ளது.

காரில் இருந்து நிவாரணப் பொருட்களை அவர் எடுத்து, தோளில் அடுக்கி நடந்து வர ஒருவர் வீடியோ படம் எடுப்பதும், பின்னர் அதை ரிக்ரொக்கில் வெளியிட்டதும் அதில் பதிவாகியுள்ளது.

அவர் மீது ஒரு தரப்பினர் அதை விமர்சனமாக முன்வைக்க, அவர் ரிக்ரொக் வீடியோவிற்காக மட்டுமே அதை பதிவு செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

 

இதையடுத்து, இந்த வீடியோவை வெளியிட்ட உப்புவெளியை சேர்ந்த ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

spot_imgspot_img

More like this
Related

கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்றுக்கு கசிப்பு கடத்திய இருவர் 800 லீற்றர் கசிப்புடன் கைது

கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்று பிரதேசத்திற்கு வாவி ஊடாக தோணியில் கசிப்பு கடத்தி...

மட்டக்களப்பில் தீ விபத்துகளை தடுக்க தீயணைப்பு சிலிண்டர் கருவிகள் பொருத்துவது கட்டாயம் மாநகர சபை முதல்வர் அதிரடி உத்தரவு

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வர்த்தக நிலையங்கள், தங்குமிடங்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்