24.1 C
Jaffna
January 6, 2025
Pagetamil
இந்தியா

சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய போது விபரீதம் : கழுத்து நெறித்து சிறுவன் பரிதாப பலி!

சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய பள்ளி சிறுவன் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ்வரன் (வயது 36). இவர் கடந்த 15 வருடங்களாக தனது மனைவி செண்பகவல்லி (வயது 28) குழந்தைகள் மித்ரன்(வயது 10), பிரசன்னா (வயது 6) ஆகியோருடன் திருப்பூர் மாவட்டம் பளவஞ்சிபாளையம் சிவசக்தி நகர் பகுதியில் வசித்து வருகிறார்.

கொரோனோ வைரஸ் காரணமாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை என்பதால் பள்ளி சிறுவர்கள் டிவி, செல்போன் மற்றும் விளையாட்டில் அதிக நேரத்தை செலவழித்துவரும் நிலையில் கடந்த சில மாதங்களாக சிவசக்தி நகர் பகுதியில் வசிக்கும் பள்ளி சிறுவர்கள் ஒன்று சேர்ந்து வீட்டு அருகில் உள்ள மரத்தில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.

மித்ரனும் அங்கு விளையாடி வந்துள்ளான். வழக்கம் போல நேற்று மித்ரன் ஊஞ்சலை சுற்றி சுற்றி விளையாடியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சேலை வேகமாக சுற்றியதில் சிறுவன் சிறிதும் எதிர்பாக்கமல் சேலை கழுத்தை சுற்றியுள்ளது.

இதனால் கத்தமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டதால் வீட்டில் இருந்தவர்கள் வெளியில் வந்து பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நீண்ட நேரம் ஆகியும் சத்தம் இல்லை என வெளியே வந்து பார்க்கும் போது சிறுவன் சேலையில் சுற்றி மயக்க நிலையில் தொங்கிக்கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த வெங்கடேஸ்வரன் உடனடியாக மித்ரனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மித்திரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியில் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வீரபாண்டி காவல் நிலையப் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊரடங்கல் குழந்தைகள் வீட்டில் விளையாடி வந்தாலும் அவர்களை பெற்றோர்கள் அவ்வப்போது கவனிக்க வேண்டும். அப்படி கவனிக்கும் போது இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தவிர்க்கலாம் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இந்திய இராணுவ வீரர்கள் இறப்பு

east tamil

டேட்டிங் செயலியில் அமெரிக்க மாடல் என ஏமாற்றி 700 பெண்களிடம் பணம் பறித்த வாலிபர் கைது

Pagetamil

விண்வெளியில் முளைக்க தொடங்கிய காராமணி பயறு விதைகள்: பரிசோதனை வெற்றி என இஸ்ரோ அறிவிப்பு

Pagetamil

‘சார்’ சர்ச்சை: அண்ணா பல்கலை. விசாரணை குறித்து ஆதாரமற்ற தகவல் – காவல் துறை விளக்கம்

Pagetamil

விண்வெளியில் வேளாண்மை செய்யும் ஆய்வில் வெற்றி!

east tamil

Leave a Comment