25.8 C
Jaffna
December 22, 2024
Pagetamil
உலகம்

சிக்னல்களில் சிவப்பு, மஞ்சள், பச்சை நிறங்களை வைத்ததற்கு பின்னால் இவ்வளவு அறிவியல் காரணம்!

உலக நாடுகளில் எல்லாம் சாலையில் பயணிக்கும் வாகனங்கள் சாலை விதிகளை மதிக்க வேண்டும் ஒவ்வொரு நாடுகளிலும் அந்தெந்த நாட்டிற்கான சாலை விதிமுறைகள் உள்ளது. இப்படியாக சாலையில் செல்லும் வாகனங்களை ஒருங்கினைக்க சிக்னல்கள் அமைக்கப்படுகின்றன. பெரும்பாலான நாடுகளில் சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிற விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. எல்லா நாடுகளிலும் இந்த மூன்று நிறங்களே பயன்படுத்துப்படுகன்றன ஏன் மற்ற நிறங்கள் பயன்படுத்துவில்லை என்று என்றாவது யோசித்துள்ளீர்களா?

​என்ன அர்த்தம்?

இதை நாம் தெரிந்து கொள்வதற்கு முன்னர் இந்த மூன்று நிறங்களை பற்றியும் தெரிந்து கொள்வோம். சிவப்பு நிறம் என்பது வாகனத்தை நிறுத்த வேண்டும் என்பதை குறிக்கும். மஞ்சள் நிறம் என்பது கிளப்ப தயாராக வேண்டும் என்பதை குறிக்கும். பச்சை நிறம் என்பது செல்ல வேண்டும் என்பதை குறிக்கும் இந்த விதிமுறை முதன் முதலில் 1868ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் சார்பில் லண்டன் பார்லிமென்டில் தான் முதன் முதலில் கொண்டுவரப்பட்டு ரயில்வே இன்ஜினியர் ஜேகே கினைட் என்பவரால் அமல்படுத்தப்பட்டது.

இந்த சிக்னல் சிஸ்டம் துவங்கப்பட்ட போது வெறும் இரண்டு நிறங்கள் மட்டுமே இருந்த சிவப்பு நிறம் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. சிவப்பு நிறம் நிறுத்த வேண்டும். பச்சை நிறம் எரிந்தால் செல்ல வேண்டும். என இருந்தது. மிக முக்கியமாக அந்த காலத்தில் மின்சாரம்இல்லாததால் இதற்கு எரிபொருள் கொண்ட விளக்குகள் மூலம் இந்த சிக்னல்கள் அமைக்கப்பட்டன.

1890களில் தான் அமெரிக்காவில் முதன் முறையாக மின்சார சிக்னல்கள் பொருத்தப்பட்டன. இதில் சிக்னல்லைட்கள் எல்லாம் மின்சார விளக்குகளை கொண்டு எரியவைக்கப்பட்டது. இதன் பின்பு தான் இந்த சிக்னல்கள் உலகம் முழுவதும் பரவியது. இன்றும் உலகில் மின்சார சிக்னல்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன. சில இடங்களில் நேரடி மின்சாரம், சில இடங்களில் பேட்டரி மின்சாரம், சில இடங்களில் சோலார் மின்சாரம் ஆகியன பயன்படுத்தப்படுகிறது.

​சிவப்பு – பச்சை

இப்பொழுது ஏன் அந்த சிவப்பு மஞ்சள் பச்சை நிறங்கள் தேர்வு செய்யப்பட்டன என காணலாம். சிவப்பு நிறம் மற்ற நிறங்களை காட்டிலும் அடத்தியானது. நீண்ட தொலைவிருந்தும் எளிதாக இந்தநிறத்தை தான் காண முடியும். அதே நேரத்தில் சிவப்பு அபாயத்தை குறிக்கும் நிறம். அதனால் சிவப்பு நிறத்தை வாகனத்தை நிறுத்துவதற்கான சின்னமாக பயன்படுத்த முடிவு செய்தனர்.

​மஞ்சள்

பச்சை நிறம் இது வாகனங்கள் செல்லலாம் என்பதற்கான நிறம். இந்த வாகனத்தை செல்ல வைப்பதற்கான நிறத்தை தேர்வு செய்ய ஏற்கனவே வாகனத்தை நிறுத்துவதற்கா நிறைத்தை தேர்வு செய்தாகிவிட்டது. அது சிவப்பு, அது சிவப்பு எனும் பட்சத்தில் செல்வதற்கான நிறம் நேர் எதிர்மாறான நிறமாக இருக்க வேண்டும். அருகில் அருகில் இருந்தாலும் எளிதாக வித்தியாசத்தை பிரித்து காட்டும் நிறமாக இருக்க வேண்டும் என்பதால் பச்சை நிறத்தை தேர்வு செய்தனர். பச்சை நிறம் எல்லா வகையிலும் சிவப்பு நிறத்திற்கான குணங்களில் எதிர் குணங்களை கொண்டவை என்பதால் அந்த நிறம் தேர்வு செய்யப்பட்டது.

​மஞ்சள் நிறத்திற்கான காரணம்

மஞ்சள் நிறம் இந்த நிறம் முதலில் தேவைப்படவில்லை. ஆனால் அதிகமான நெருக்கடி மிகுந்த சாலைகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது இருப்பதால் அந்த காலத்தில் சிவப்புசிக்னல் விழுந்தால் வாகனத்தின் எரிபொருள் செலவை குறைக்க அதை நிறுத்தி விடுவர். பச்சை விழுந்த பின்பு வாகனத்தை ஸ்டார்ட் செய்து பின்னர் சென்றனர். இதனால் அதிக நேரம் எடுத்ததால் அதை சமாளிக்க பச்சை சிக்னல் விழும் முன்பு மஞ்சள் சிக்னலை கொடுத்து அவர்களை தயார் செய்வதற்காக இப்படி ஒரு சிக்னலை கொண்டு வரவேண்டும் என முடிவு செய்தனர். அதற்காக இரண்வு நிறமும் இல்லாமல் வேறு நிறத்தை தேர்வு செய்தனர். அது தான் மஞ்சள் நிறம்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உகண்டாவை உலுக்கும் டிங்கா டிங்கா வைரஸ்: இந்த வைரஸ் தொற்றினால் தொடர்ந்து நடனமாடிக் கொண்டேயிருப்பீர்கள்!

Pagetamil

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்!

east tamil

பிரான்ஸை உலுக்கிய பாலியல் வல்லுறவு வழக்கு: சொந்த மனைவியை கொடூரமான பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய கணவன், 50 ஆண்களுக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

துரோகம் செய்த காதலி கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை: காதலனுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு!

Pagetamil

12 முறை விவாகரத்து செய்து… இணைந்த தம்பதி: 13வது முறை அரசாங்கமே கடுப்பானது!

Pagetamil

Leave a Comment