25.8 C
Jaffna
December 26, 2024
Pagetamil
இந்தியா

ஒரு ஆண்டாக கழிவறையில் தனியாக வாழ்ந்த பெண்… நடந்தது என்ன?

கேரள மாநிலம் பாலகாடு பகுதியைச் சேர்ந்தபெண் முருகா, ஏழை குடும்பத்து பெண்ணான இவரை இவரது கணவரும், மகளும் கைவிட்டுவிட்டனர். இதனால் இவர் தனக்கு சொந்தமான பழைய வீட்டில் வசித்து வந்தார். வருமானத்திற்காக கூலி வேலைக்கு சென்றுவந்தார். அதில் வரும் வருமானம் அவரது தினசரி உணவு செலவிற்கே சரியாக போனது அதை தவிர வேறு எந்த செலவையும் அவரால் செய்ய முடியவில்லை. பல நேரங்களில் அவர் உணவைகூட அக்கம் பக்கதினரிடமிருந்து தான் வாங்கி சாப்பிட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்தாண்டு பெய்த கனமழையால் அவர் தங்கியிருந்த வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் அவரால் அந்த வீட்டில் வசிக்க முடியவில்லை. ஆனால் இவருக்கு செல்வதற்கு வேறு இடமும் இல்லை. அந்த கூரையை சரி செய்ய தன் கையில் காசும் இல்லை. இதனால் வேறு வழியில்லாமல் முருகா தன் வீட்டின் வெளிப்புறம் தான் பயன்படுத்துவதற்காக வைத்திருந்த கழிப்பறையில் சென்று தங்கினார். கடந்த ஒரு ஆண்டாக அங்கே தான் தங்கியுள்ளார்.

இது குறித்து கேரளா டிவி சேனலில் சிறப்பு செய்தி ஒன்று வெளியானது. அதில் அவர்கள் ஒரு வருடமாக கழிப்பறையிலேயே வாழும் பெண் என்று செய்தி வெளியிட்டனர். இதை பார்த்த அம்மாநில மின்சாரத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி தன் கட்சி உறுப்பினர்களிடம் சொல்லி அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அந்த பெண்ணின் வீட்டை கட்டி தரவும் உத்தரவிட்டார். அதன் பேரில் அப்பகுதியில் உள்ள அவரது கட்சி சார்ந்த உறுப்பினர்கள் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததோடு அவரது இடிந்த போன வீட்டை சீரமைத்து தர உறுதியளித்தனர். இந்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது

ஒரு ஆண்டாக தனி ஆளாக ஒரு பெண் கழிப்பறையிலேயே வாழ்ந்த சம்பவம் தற்போது பலரை ஆச்சரிப்படவைத்துள்ளது. பலர் கேரள அமைச்சர் கிருஷ்ணன் குட்டியின் நடவடிக்கைக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நெரிசலில் உயிரிழந்த பெண் குடும்பத்தினருக்கு ‘புஷ்பா’ படக்குழு சார்பில் ரூ.2 கோடி நிதியுதவி

Pagetamil

“என்னை நானே சாட்டையால் அடித்துக் கொள்வேன், செருப்பு அணிய மாட்டேன்!” – அண்ணாமலை கொந்தளிப்பு

Pagetamil

தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல் சம்பவம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Pagetamil

3 கணவர்களிடமும் இயற்கைக்கு மாறான உறவு குற்றச்சாட்டு: பெண் கைது!

Pagetamil

12 இளைஞர்களை காதலித்து ஏமாற்றிய பெண்: 19 வயது இளைஞருடன் ஓட்டம்

Pagetamil

Leave a Comment