24.9 C
Jaffna
December 17, 2024
Pagetamil
லைவ் ஸ்டைல்

பலாப்பழத்தின் அனைத்து பகுதிகளுமே உணவாகும் என்பது தெரியுமா!

பலாப்பழத்தில் இருக்கும் தாது, விட்டமின் சத்துக்களும் ஆன்டி ஆக்சிடென்டுகளும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலைத் தாக்கும் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை காக்கும்.

பலாப்பழம் எல்லோருக்கும் பிடித்தமானது. அனைவரும் அதனை ரசித்து, சுவைப்பார்கள். சத்துக்கள் நிறைந்த பலாப் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியும் உள்ளது. இந்தப் பழத்தின் அனைத்து பகுதிகளுமே உணவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பலாப்பழம் பற்றிய முத்தான பத்து விஷயங்கள்:-

1 பலாப்பழத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய சர்க்கரை சத்துக்களான ப்ரக்டோஸ், சுக்ரோஸ் போன்றவை உள்ளன. 100 கிராம் பழத்தில் 95 கலோரி உள்ளது. நார்ச்சத்தும் நிறைந்திருக்கிறது. 100 கிராம் பழத்தில் 3.6 கிராம் நார்ச்சத்து உள்ளது. ஒருவருக்கு ஒரு நாள் தேவைப்படும் விட்டமின்-ஏ சத்தின் அளவை ஈடுகட்ட அவர் 200 கிராம் பலாப்பழம் சாப்பிடவேண்டும். 100 கிராம் சாப்பிட்டால் அவரது வைட்டமின்-ஏ தேவையில் பாதி அளவு ஈடுகட்டப்படும்.

2 பலாப்பழ விதைகளை காயவைத்து தூளாக்கி அந்த மாவில் இருந்து பலவகையான பலகாரங்களை தயார் செய்து சுவைக்கலாம்.

வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம்! – Puthusudar

3 பலாப்பழ விதைகளும் சத்து நிறைந்ததே. மாமிசத்தில் இருக்கும் புரோட்டீன் சத்து பலாப்பழ விதையில் உள்ளது. பைட்டோ நியூட்ரிஷியன்ஸ், ப்ளோவனாயிட்ஸ் போன்றவை அதிகமாக இருப்பது புற்றுநோயை கட்டுப்படுத்த உதவும்.

4 பலாக்காயை ‘ஏழைகளின் இறைச்சி’ என்று குறிப்பிடுவார்கள். காயின் தசைப்பகுதியை மாமிச உணவுகளின் ருசியுடன் தயாரித்து உண்ணலாம். இது இரத்த சோகை நோயை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. இதில் இருக்கும் விட்டமின்-ஏ சத்து பார்வைத் திறனையும் மேம்படுத்தும்.

5 பலாப்பழத்தில் இருக்கும் தாது, விட்டமின் சத்துக்களும் ஆன்டி ஆக்சிடென்டுகளும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலைத் தாக்கும் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை காக்கும்.

6 பலாப்பழத்தில் இருக்கும் நார்ச் சத்து சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. பலவகை காய்கறிகளில் இருக்கும் நார்ச்சத்துக்கு ஒப்பானதாக இது இருக்கிறது. பலாப்பழத்தில் இருக்கும் சர்க்கரை சத்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிரடியாக உயரவிடாமல் வைத்திருக்கும். அதே நேஇரத்தில் சர்க்கரை நோயாளிகள் இரண்டு சுளைக்கு மேல் சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். இதில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. இரத்த அழுத்தத்தை ஓரளவு சீராக்க இது உதவுகிறது.

7 பலாச்சுளை தவிர மீதமுள்ள பகுதிகளை பலரும் குப்பையில் வீசிவிடுவார்கள். சுளைகளை ஒட்டியுள்ள தசைப்பகுதியில் ‘பெக்டின்’ என்ற சத்து உள்ளது. அது சர்க்கரை நோய், கொழுப்பு, புற்றுநோய் போன்றவைகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டிருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

8 பலாப்பழத்தின் முள் பகுதிகளை நீக்கிவிட்டு அதன் தசைப்பகுதியை நீரில் போட்டு கொதிக்கவைத்து கூட்டு, பொரியல் போன்றவைகளை செய்தால் அது மாமிச உணவுகளுக்கு ஈடான சுவையும், சத்தும் தரும்.

9 தற்போது குடல் புற்று நோயால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பலாப்பழத்தில் இருக்கும் சத்துக்கள் குடலில் புற்றுநோயை உருவாக்கும் வேதி மாற்றங்களை தடுக்கிறது.

10 தாது சத்துக்கள், பொட்டாசியம், விட்டமின்-பி போன்றவைகளும் பலாப்பழத்தில் உள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment