Pagetamil
ஆன்மிகம்

பல முறை காதலில் விழும் ராசிகள்!

ஒருவரின் நிதி நிலை முதல் திருமண வாழ்க்கை மற்றும் வேலை, தொழில் என கட்டுப்படுத்துவதாக இருக்கும். ஒரு நபரின் ஆளுமை மற்றும் இயல்பு ஆகியவை பொறுத்து அவர்கள் காதல் விவகாரமும் அமையும். எந்த ராசியினர் பல முறை காதலில் விழுவார்கள் என்பதை பார்ப்போம்.

ஜோதிடத்தில் 12 ராசிக்கும் ஒவ்வொரு இயல்பு, குணம் உண்டு. இந்த இயல்பு அவர்களின் நிதி நிலை முதல் திருமண வாழ்க்கை மற்றும் வேலை, தொழில் என கட்டுப்படுத்துவதாக இருக்கும். இந்த விதியில் காதலும் அடங்கும்.

ஒரு நபரின் ஆளுமை மற்றும் இயல்பு ஆகியவை பொறுத்து அவர்கள் காதல் விவகாரமும் அமையும். எந்த ராசியினர் பல முறை காதலில் விழுவார்கள் என்பதை பார்ப்போம்.

மிதுனம்
மிதுன ராசியினர் அன்பாக பழகக்கூடியவர்கள். இவர்களின் பலவீனமே அழகு தான். ஜோதிடத்தின்படி மிதுன ராசியினர் ஒரு இடத்தில் தங்குவதில்லை. இவர்களின் அழகு, அறிவாளித்தனம் காரணமாக இவர்கள் எளிதாக ஒருவரை காதலில் விழ வைக்கக்கூடியவர்கள். அதன் காரணமாக இவர்கள் 4 முறை கூட காதலிக்க வாய்ப்புள்ளது. ஒருவருடனான உறவு முறிந்தவுடன் அடுத்தவரை காதலிக்க தொடங்குகின்றனர்.

சிம்மம்
சிம்ம ராசியினரின் ஆளுமைத் திறன், பலருடன் எளிதாக பழகும் தன்மை, சிறப்பாக பேசக்கூடிய தன்மை ஆகியவற்றால் ஒருவரை எளிதாக ஈர்க்கக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர்கள். இவர்கள் தங்கள் வாழ்வில் பல முறை காதலிக்கிறார்கள். ஒரு உறவில் கூட நீண்ட காலம் நிலைக்காததாக இருக்கும். இருப்பினும் திருமண உறவில் சிறந்த நபராக திகழ்வார்கள்.

துலாம்
சுக்கிரனை ராசி நாதனாக கொண்ட துலாம் ராசியினர் காதலில் வல்லவர்கள். அதே சமயம் இவர்கள் நேர்மையானவர்களாகவும், விசுவாசமாகவும் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் உறவில் எந்த அளவிற்கும் செல்ல தயங்கமாட்டார்கள். இருப்பினும் இவர்களின் உறவு புளித்தவுடன் வேறொரு உறவுக்கு செல்கிறார்கள். இவர்களின் இனிமையான பேச்சுத் திறனால் எளிதாக ஒருவரை கவரும் ஆற்றல் வாய்ந்தவராக இருப்பார்கள்.

தனுசு
தனுசு ராசியினர் தாங்கள் காதலிக்கக்கூடிய நபரிடம் நேர்மையாக நடந்து கொள்வார்கள். மிக சிறப்பாக காதல் செய்யக்கூடிய இவர்கள், ஒருவரிடம் உறவில் விரிசல் ஏற்பட்டு பிரிந்தால், மீண்டும் திரும்பச் செல்ல வாய்ப்புள்ளது. வேறொருவரை காதலிக்க வாய்ப்புள்ளது

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்றைய ராசி பலன்கள் – 28.02.2025 – வெள்ளிக்கிழமை

Pagetamil

இன்றைய ராசி பலன்கள் – 27.02.2025 – வியாழக்கிழமை

Pagetamil

இன்றைய ராசி பலன்கள் – 26.02.2025 – புதன்கிழமை

Pagetamil

இன்றைய ராசி பலன்கள் – 25.02.2025 – செவ்வாய்க்கிழமை

Pagetamil

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள் – 24.02.2025

Pagetamil

Leave a Comment