சிம்பு – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வருகிறது ‘மாநாடு’. இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா போலீஸ் அதிகாரி கேரக்டரில் முக்கிய வில்லனாக நடித்துள்ளனர். இவர்களுடன் எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி அமரன், டேனியல் அன்னி போப், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதன் ஆடியோ உரிமையை யுவன் சங்கர் ராஜாவின் யூ1 ரெக்கார்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அப்துல் காலிக் என்ற கேரக்டரில் சிம்பு நடித்துள்ள இப்படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இதையடுத்து ரம்ஜான் பண்டிகையொட்டி ‘மாநாடு’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா தாக்கத்தில் மக்கள் திணறி வருகின்றனர். எனவே மாநாடு ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடு நிறுத்திவைக்கப்ட்டதாக சுரேஷ் காமாட்சி தெரிவித்தார். இந்நிலையில் படத்தில் இருந்து முதல் பாடல் meherezylaa டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இந்த தகவலை படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.