கொரோனா நிவாரண நிதியாக ரூ.2 கோடி அளித்த லைக்கா நிறுவனம்!

Date:

கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர். இருந்தப்போதிலும் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் கொரானாவிலிருந்து நம்மை காக்கும் ஒரே ஆயுதமாக தடுப்பூசி மட்டுமே உள்ளது. இதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரவாக செயல்படுத்தி வருகிறது அரசு. பொதுமக்களும் மிகவும் ஆர்வமாக வரிசையில் நின்று தடுப்பூசியை போட்டு வருகின்றனர்.

கொரோனாவின் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக மருத்துவ கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஏராளமாக நிதி ஆதாரம் தேவைப்படுவதால் தாராள நிதி அளிக்கும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அந்த வகையில் நடிகர் ரஜினி, அஜித், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் ஏற்கனவே நிதியளித்துள்ளனர்.

இதற்கிடையே பல வெற்றிப்படங்களை தயாரித்து வரும் பிரபல படத்தயாரிப்பு நிறுவனம் லைக்கா. இந்நிறுவனம் பல முன்னணி ஹீரோக்களின் படங்களை தற்போது தயாரித்து வருகிறது. இந்நிலையில் லைக்கா நிறுவனத்தின் நிறுவனர் அல்லிராஜா சுபாஸ்கரன் சார்பில் அதன் நிர்வாகிகள் திரு.GKM.தமிழ்குமரன், திரு.நிருதன் மற்றும் கௌரவ் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று தலைமைச்செயலகத்தில் நேரில் சந்தித்தனர். அப்போது ரூபாய் 2 கோடியை கொரோனா நிவாரண நிதியாக அளித்தனர். லைக்காவின் இந்த செயலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மக்களது உரிமைகளைப் பறிக்கும் பேரபாயம்: சமத்துவக் கட்சி கடும் கண்டனம்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மக்களது உரிமைகளைப் பறிக்கும் பேரபாயம்: சமத்துவக் கட்சி...

தலவாக்கலையில் மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகத் தந்தை கைது!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 39 வயதுடைய நபர் ஒருவர்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்