குக் வித் கோமாளி புகழ், புதிய படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.
விஜய் டிவியில் ‘அது இது எது’ நிகழ்ச்சியில் காமெடி நடிகராக அறிமுகமான புகழ், அதன் பின்னர் ”கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்’ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதையடுத்து ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்ட புகழ் தன்னுடைய இயல்பான பாடி லேங்குவேஜ், டைமிங் காமெடி மற்றும் எக்ஸ்பிரஷன்ஸ் மூலம் அனைவரையும் சிரிக்க வைத்தார். அனைவருக்கும் அவரது காமெடி பிடிக்கவே அவருக்கு அதிக ரசிகர்கள் உருவானார்கள். மேலும் சீசன்2 புகழுக்கு இன்னும் அதிக ரசிகர்களை சம்பாதித்துக் கொடுத்தது.
தற்போது தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமாகி உள்ள புகழ் பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் படத்திலும் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்திலும் புகழ் நடித்து வருகிறார் நடித்து வருகிறார். மேலும் பல படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில் புகழ் புதிய படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக இருப்பதாக கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு ‘தங்க முட்டை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சக்தி சிதம்பரம் கடைசியாக யோகிபாபு நடித்துள்ள ‘பேய்மாமா’ படத்தை இயக்கியுள்ளார். புகழ் நடிப்பில் அவர் இயக்க இருப்பது அவரது 25வது படமாகும். இந்தப் படத்தில் புகழ் கதாநாயகனாக நடிக்கவே, கதாநாயகி கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படத்தை மிக குறைந்த பட்ஜெட்டில் உருவாக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.