பீர் மற்றும் ஒயின் மதுபானங்களில் குறைந்த அளவிலான அல்கஹால் உள்ளது. சில நாடுகளில் அல்கஹால் இல்லாத பீர் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக அல்கஹால் இல்லாத பீர் மற்றும் ஒயின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவின் சிட்னி வடக்கு பகுதியில் உள்ள கடற்கரை ஓரத்தில் தொழில்முனைவோரான ஐரீன் பால்கோன் முதன்முதலாக அல்கஹால் இல்லாத பீர் மற்றும் ஒயின் கடையை திறந்துள்ளார். இது ஆஸ்திரேலியாவின் அல்கஹால் அல்லாத முதல் மதுபானக்கடை ஆகும்.
இதுகுறித்து ஐரீன் பால்கோன் கூறும்போது, நான் ஒரு பெரிய மதுபான கடைக்கு எதிரே என் கடையை திறந்திருக்கிறேன். ஒரு தொழில் துறையை சீர்குலைக்க வந்திருக்கிறேன். தற்போது அல்கஹால் இல்லாத மதுபானத்தை அனைவரும் மகிழ்ச்சியாக வாங்கி செல்கிறார்கள்” என்றார்.
கடந்த 20 ஆண்டுகளில் 18 வயதிலிருந்து 24 வயதுடைய அவுஸ்ரேலியர்கள் குடிக்காமல் இருப்பது இரட்டிப்பாகி உள்ளதாக லா டிரோப் பல்கலைக்கழகத்தின் மதுபான கொள்ளளவு ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அவுஸ்ரேலியாவில் மதுபான பழக்கம் சற்று மாறி கொண்டு வருவதாக தெரிகிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அங்கு அல்கஹால் இல்லாத மதுபானங்கள் மிகவும் பிரபலமாகி வருகிறது.
இந்த மதுபானங்களை தயாரிக்கும் அலிஸ்டர் வைட்லி கூறும்போது, “நாம் ஒரு பெரும் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். மதுபான நிறுவனங்கள் விற்கும் மதுபானங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் அல்கஹால் அல்லாத பானங்களையும் நாம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்றார்.