உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்: இந்தியா நிதான தொடக்கம்!

Date:

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நாணயச்சுழற்சயில் வென்ற நியூஸிலாந்து கப்டன் வில்லியம்ஸன் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் ஆடி வரும் இந்திய அணி 14 ஓவர்கள் நிறைவில் 41 ஓட்டங்களை பெற்று ஆடி வருகிறது.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி இங்கிலாந்தின், சவுத்தாம்டன் நகரில் நடக்கிறது. இந்தியா, நியூசிலாந்து மோதும் இந்த போட்டியின் நேற்றைய முதல் நாள் ஆட்டம் மழை, போதிய வெளிச்சமின்மையால் தடைப்பட்ட நிலையில், இரண்டாவது நாளான இன்று (சனிக்கிழமை) இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30 மணியளவில் போட்டி தொடங்கியது.

இதில் நாணயச்சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து அணியின் கப்டன் வில்லியம்ஸன் பந்தவீச்சை தேர்வு செய்தார்.

இந்திய அணி இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள், மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், 6 வீரர்கள் என்கிற அமைப்புடன் களமிறங்குகிறது. நியூஸிலாந்து அணி, வலுவான நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்தியாவுடன் மோதுகிறது.

இந்தியா சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா, கில் ஆகியோர் களம் இறங்கி உள்ளனர்.

இந்திய அணி விவரம்:

விராட் கோலி (கப்டன்), அஜிங்க்ய ரஹானே (துணை கப்டன்), ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்ப்ரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி.

நியூசிலாந்து அணி

கேன் வில்லியம்ஸன் (கப்டன்), ரொம் லதம், கொன்வே, ரோஸ் ரெய்லர், ஹென்ரி நிக்கோலஸ், வொட்லிங், கொலின்டி கிராம், ரிம் சௌதி, கைல் ஜமீசன், நீல் வோக்னர், ட்ரென் வொல்ட்

spot_imgspot_img

More like this
Related

இந்திய- நேபாள எல்லை காட்டுக்குள் கைதான யாழ்ப்பாணத்தவர்கள்

இந்தியா-நேபாள எல்லையில் உள்ள பஹ்ரைச் மாவட்டத்தில், ரஜ்ஜன்வா சோதனைச் சாவடிக்கு அருகில்,...

ஈரான் மீது விரைவில் மற்றொரு தாக்குதல்: ட்ரம்ப் அறிவிப்பு!

போர் எட்டு மாதங்களை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையிலும், எரிபொருள் விலை உயர்வு அமெரிக்க...

மன்மதராசாவுக்கு விளக்கமறியல்

இளம் பெண் ஒருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்