ரஞ்சன் சிகிச்சைக்காக வெளியில் வந்து போனார்!

Date:

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிகிச்சைக்காக கராபிட்டி வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டு, மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர் ந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் சிறைவைக்கப்பட்டுள்ள, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று சனிக்கிழமை கராபிட்டி வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டார்.

வைத்தியரின் ஆலோசனைக்கமைய சிகிச்சைக்காகவே இவர் இவ்வாறு வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

சிறைச்சாலை அதிகாரிகள் மிகவும் பாதுகாப்பான முறையில் அவரை வைத்தியசாலைக்கு அழைத்து வந்திருந்ததுடன், அவருக்கான சிகிச்சைகள் முடிவுற்றதும், அவர் மீண்டும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

பாதசாரி கடவையை கடந்த பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த துயர முடிவு

நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்த இளம் பெண் ஒருவர்,...

போதைப்பொருள் வாங்க வீட்டிலிருந்த தொலைக்காட்சியை விற்க முயற்சி: தடுத்த தாயை கொன்ற மகன்!

வத்தளை காவல் பிரிவுக்கு உட்பட்ட ஹெக்கிட்டவில், போதைப்பொருளுக்கு அடிமையான மகன் ஒருவன்,...

மடு விபத்தில் ஒருவர் பலி

மன்னார் - மடு பிரதான வீதியில் இன்று (18) அதிகாலை 5.45...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்