மேலும் 2,372 கொரோனா வைரஸ் நோயாளிகள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 233,064 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில், 2,361 பேர், புத்தாண்டு COVID-19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டிலிருந்து நாட்டுக்கு வந்த 11 நபர்களும் தொற்றிற்குள்ளாகினர்.
தற்போது, 35,205 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
COVID-19 இலிருந்து குணமடைந்த 1,289 நபர்கள் நேற்று மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 195,434 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று சந்தேகத்தி்ல் 1,436 பேர் மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.
இதேவேளை, நேற்று முன்தினம் 51 COVID-19 தொடர்பான மரணங்கள் பதிவாகின. இலங்கையில் இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 2,425 ஆக அதிகரித்துள்ளது.
31 ஆண்களும் 20 பெண்களுமே நேற்று முன்தினம் மரணித்தனர்.
அவர்களில் 14 பேர் 30 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், 37 பேர் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டனர்.