24.5 C
Jaffna
January 24, 2025
Pagetamil
உலகம்

காதலை அதிகப்படுத்த 3 மாதங்கள் கைவிலங்கிட்டபடி வாழ்ந்த ஜோடி: விலங்கை உடைத்து பிரிந்து சென்றனர்!

தமக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டையடுத்து, உறவை சரி செய்வதற்காக இருவரும் கைகளை பிணைத்துக் கொண்டு 3 மாதங்கள் வாழ்ந்த தம்பதியினர் கைவிலங்கை உடைத்துக் கொண்டுள்ளனர். அத்துடன், இருவரும் பிரிந்து விட்டனர்.

உக்ரைனில் கார்கிவ் நகரைச் சேர்ந்த அலெக்சாண்டர் குட்லே (33) மற்றும் விக்டோரியா புஸ்டோவிடோவா (29) ஆகியோர் 123 நாட்கள் தம்மை ஒன்றாக பிணைத்துக் கொண்டு வாழ்ந்தனர்.

இருவருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாட்டை சரி செய்ய இந்த முயற்சி எடுத்தார்கள். எனினும் அது பலனளிக்கவில்லை.

கியேவில் உள்ள தம்பதியினரை இணைக்கும் காதல் சின்னத்தின் முன்பாக மாபெரும் வெட்டிகளால் அவர்களின் சங்கிலி துண்டிக்கப்பட்டது. அத்துடன், இருவரும் தனிவழி சென்றனர்.

“நான் எனது சொந்த சுதந்திரமான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன், ஒரு சுயாதீனமான நபராக வளர விரும்புகிறேன்,” என்று விக்டோரியா கூறினார். அவர் விடுவிக்கப்பட்டதும் ‘ஹூரே’ என்று கூச்சலிட்டார்.

“நான் சுதந்திரமாக இருக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

அலெக்சாண்டர், இன்ஸ்டாகிராமில் அவர்களின் அசாதாரண பயணத்தைத் தொடர்ந்து வந்த தங்கள் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இன்டகிராமில் தம்மை பின்தொடர்பவர்களிற்கு அலெக்ஸ்சாண்டர் நன்றி தெரிவித்தார்.

முன்னதாக, அந்த ஜோடிக்குள் முரண்பாடு வந்து, விக்டோரியா பிரிந்து செல்ல விரும்புவதாகக் கூறினார்.  இவர்களிற்குள் அடிக்கடி மோதல் வந்து விக்டோரியா பிரிந்து சென்று விடுவார். இதையடுத்து, உக்ரேனிலுள்ள ஒரு பண்டைய காதல் வழக்கத்தின்படி, இருவரும் குறிப்பிட்ட காலம் தமது கைகளை விலங்கால் பிணைத்துக் கொள்ளும் பரிந்துரையை அலெக்சாண்டர் முன் வைத்தார்.

முதலில் விக்டோரியா மறுத்து, தொலைபேசியை துண்டித்து விட்டார்.

பின்னர் ஒரு வழியாக சம்மதித்தார். கடந்த பெப்ரவரி 14 காதலர் தினத்திலன்று இந்த ஜோடி தமது கைகளில் விலங்கிட்டது. திருமணம் செய்து கொள்ளும் வரை கைகளை பிணைத்திருப்போம் என சபதம் செய்தனர்.

மே 19 அன்று, தம்மை பிணைத்துக் கொண்டு அதிக காலம் வாழ்ந்த ஜோடி என்ற பெருமையையும் இவர்கள் பெற்றுக் கொண்டனர்.

அவர்கள் ஒரு ஜோடி ஒன்றாக சங்கிலியால் பிணைக்கப்பட்ட அதிக நேரம் உக்ரேனிய மற்றும் உலக சாதனை இரண்டையும் முறியடித்ததாக அறிவிக்கப்பட்டது.

எனினும், அவர்களால் தொடர்ந்து ஒன்றிணைந்து இருக்க முடியவில்லை. நீண்ட விவாதத்தின் பின் தனித்து வாழ முடிவெடுத்து, தம்பதியினரை இணைக்கும் காதல் சின்னத்தின் முன்பாக கைவிலங்கை வெட்டிக் கொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

18,000 இந்தியர்களை வெளியேற்றவிருக்கும் அமெரிக்கா

east tamil

தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அனுமதி

east tamil

மூத்த ஹிஸ்புல்லா தலைவர் சுட்டுக்கொலை

Pagetamil

தாய்வானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 15 பேர் காயம்

east tamil

அமெரிக்கா உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவதாக டிரம்ப் அறிவிப்பு

east tamil

Leave a Comment