வனிதா விஜயகுமார் பிரபல சீரியல் நடிகர் சஞ்சீவ் உடன் எடுத்த போட்டோவை வெளியிட்டு அவர் தனது சகோதரர் என தெரிவித்து உள்ளார
வனிதா விஜயகுமார் தான் பிக் பாஸ் ஜோடிகள் ஷோவில் மீண்டும் பங்கேற்க தொடங்கி இருப்பதாக புகைப்படம் வெளியிட்டு இருந்தார். இதனால் இந்த வாரம் பிக் பாஸ் ஜோடிகள் நிச்சயம் ஒளிபரப்பாகும் என ரசிகர்கள்மகிழ்ச்சியானார்கள்.
மேலும் வனிதா வெளியிட்ட மற்றொரு விஷயமும் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா அங்கு வந்திருந்த நடிகர் சஞ்சீவ் மற்றும் அவரது மனைவி உடன் சேர்ந்து எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அவர் வனிதாவின் நெருக்கமான உறவினர் என்பது அவரது பதிவின் மூலமாக தான் ரசிகர்களுக்கு தெரியவந்திருக்கிறது.
வனிதாவின் அம்மா மஞ்சுளாவின் சகோதரி ஷியாமளாவின் மகன் தான் சஞ்சீவ். அவர் எனது சகோதரர் என வனிதா குறிப்பிட்டு இருக்கிறார். அவர்கள் இவ்வளவு நெருக்கமான உறவினர்களா என ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார்கள்.
சஞ்சீவ் நடிகர் விஜய்யின் நெருக்கமான நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மாஸ்டர் படத்தில் விஜய்யின் நண்பராகவே நடித்திருந்தார் என்பது அனைவரும் அறிந்தது தான். ஒரு காலத்தில் சஞ்சீவ் சீரியல்களில் மிகவும் பிஸியான நடிகராக தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.