டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் ஸ்டீவன் சுமித் முதலிடத்தை பிடித்தார்!

Date:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவாிைச பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் நியூசிலாந்து அணியின் கப்டன் கேன் வில்லியம்சன் நம்பர் வன் இடத்தை இழந்து இருக்கிறார்.

முழங்கை காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் விளையாடாததால் 9 புள்ளிகளை பறிகொடுத்த வில்லியம்சன் (886 புள்ளி) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இதனால் அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் (891 புள்ளி) மீண்டும் ‘நம்பர் வன்’ இடத்துக்கு முன்னேறினார்.

அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

மற்றொரு அவுஸ்திரேலிய வீரர் லபுஸ்சேன் (878 புள்ளி) 3வது இடத்தில் நீடிக்கிறார்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சோபிக்காத இங்கிலாந்து கப்டன் ஜோ ரூட் (797 புள்ளி) ஒரு இடம் சறுக்கி 5வது இடத்தை பெற்றுள்ளார். இந்திய அணியின் கப்டன் விராட்கோலி (814 புள்ளி) ஒரு இடம் ஏற்றம் கண்டு 4வது இடத்தை பிடித்து இருக்கிறார். இந்திய வீரர்கள் ரிஷாப் பண்ட், ரோகித் சர்மா (தலா 747 புள்ளி) கூட்டாக 6வது இடத்தில் தொடருகின்றனர்.

8வது இடத்தில் நியூசிலாந்தின் ஹென்ரி நிக்கோலஸ் (732 புள்ளி), 9வது இடத்தில் அவுஸ்திரேலியாவின் டேவிட் வோர்னர் (724 புள்ளி), 10வது இடத்தில் பாகிஸ்தானின் பாபர் ஆசம் (714 புள்ளிகள்) பெற்றனர்.

இலங்கை டெஸ்ட் கப்டன் திமுத் கருணாரத்ன 712 புள்ளிகளுடன் 11வது இடத்தில் உள்ளார்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பட் கம்மின்ஸ் (908 புள்ளி) முதலிடத்திலும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் (850 புள்ளி) 2வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

அடுத்தடுத்த இடங்களில் நியூசிலாந்தின் ரிம் சௌதி, அவுஸ்திரேலியாவின் ஹசில்வூட்,  நியூசிலாந்தின் வக்னர், இங்கிலாந்தின் ஸ்ருவர்ட் புரோட், தென்னாபிரிக்காவின் ரபாடா, இங்கிலாந்தின் அன்டர்சன், மேற்கிந்தியத்தீவுகளின் ஹோல்டர், அவுஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்ரக் பெற்றனர்.

இலங்கையின் சுரங்க லக்மல் 21வது இடத்தில் உள்ளார்.

சகலதுறை வீரர்ர்கள் தரவரிசையில் மேற்கிந்தியத்தீகள் வீரர் ஜோசன் ஹோல்டர் (412 புள்ளி) முதலிடத்திலும், இ்ந்தியாவின் ரவீந்திர ஜடேஜா (386 புள்ளி) 2வது இடத்திலும், ஆர்.அஸ்வின் (353 புள்ளி) 4வது இடத்திலும் தொடருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

கல்முனை வைத்தியசாலை ஆடை விவகார வழக்கு: நவம்பர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

கல்முனை வைத்தியசாலையின் ஆடை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டமைக்கு வைத்தியர் டாக்டர்...

மட்டக்களப்பு நீதிமன்றில் எம்.பி அருச்சுணா, உட்பட 3 பேரை எதிர்வரும் நவம்பர் 2 ம்திகதி ஆஜராகுமாறு உத்தரவு —

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன். நாடாளுமன்ற...

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகபூர்வ வழக்கறிஞராக நியமனம்

சர்ச்சைக்குரிய குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு நடவடிக்கைகள் தொடர்பில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்