24.9 C
Jaffna
December 16, 2024
Pagetamil
தொழில்நுட்பம்

யாரெல்லாம் உங்க Whatsapp DP பார்த்தார்கள் என்று தெரிந்துக்கொள்ள வேண்டுமா?

வாட்ஸ்அப் இன்று மக்களின் வாழ்க்கை முறையில் ஒரு அங்கமாக மாறியுள்ளது. பக்கத்து வீட்டில் இருப்பவர்களுடன் பேசுவது முதல் வெளிநாடுகளில் இருப்பவர்களிடம் பேசுவது வரை மக்கள் பெரும்பாலான தகவல் தொடர்புக்கு வாட்ஸ்அப் தான் பயன்படுத்துகின்றனர். பலருக்கு, முழு வணிகமும் வாட்ஸ்அப்பில் தான் இயங்குகிறது. பல நிறுவனங்களின் குரூப்கள் வாட்ஸ்அப் மூலம் தான் இயங்குகின்றன.

இது போன்று ஒவ்வொன்றுக்குமென நம் தொடர்பு பட்டியலில் பல நூறு தொடர்புகள் இருக்கும். இப்படி பலர் நம் தொடர்பில் இருக்கும்போது ஸ்டேட்டஸ் வைத்தால் அதை யார் பார்க்கிறார்கள் என்பதை பார்ப்பது எளிதான ஒரு விஷயமாக இருக்கிறது. ஆனால் நீங்கள் வாட்ஸ்அப் profile photo வை மாற்றினால் அதை யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்பதை தெரிந்துக்கொள்ள முடியாதல்லவா, ஆனால் அதற்கும் ட்ரிக் இருக்கிறது. அதையும் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். அது எப்படி என்று தானே கேட்கிறீர்கள். அதற்காக தான் இந்த பதிவு.

உங்கள் வாட்ஸ்அப் சுயவிவரப் படத்தை யார் பார்க்கிறார்கள் என்பதை அறிய, நீங்கள் ஒரு சிறிய Android பயன்பாட்டைப் பதிவிறக்க வேண்டும். எனவே முதலில் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து WhatsApp- Who Viewed Me அல்லது Whats Tracker என்று பெயரிடப்பட்ட பயன்பாட்டைப் பதிவிறக்கவும்.

உங்கள் தொலைபேசியில் Whats Tracker எனும் செயலியை இன்ஸ்டால் செய்த பின், நீங்கள் கொஞ்ச நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். உங்கள் வாட்ஸ்அப் சுயவிவரப் புகைப்படத்தை யாரெல்லாம் பார்க்கிறார்கள் எனும் தகவலை இந்த செயலி சேகரிக்கும். அதற்குப் பிறகு, உங்கள் profile போட்டோவை யாரேனும் பார்த்தால் அவர்களின் பெயர்களுடன் மொபைல் எண்களை இது காண்பித்துவிடும். இருப்பினும் இந்த பட்டியலில் கடந்த 24 மணி நேரத்தில் உங்கள் profile போட்டோவைப் பார்த்தவர்களின் பெயர்கள் மட்டுமே இருக்கும். உங்கள் வாட்ஸ்அப் profile போட்டோவை யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்பதை இந்த வகையில் நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

மைக்ரோசொப்ட் விண்டோஸ் செயலிழப்பு – ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ சிக்கலும், சில புரிதல்களும்

Pagetamil

இந்தியராணுவத்தில் 51 கிலோ எடை கொண்ட ரோபோ நாய்கள்!

Pagetamil

Gemini AI மொடல் அறிமுகம்: AI ரேஸில் முந்தும் கூகுள்?

Pagetamil

ருவிட்டரின் லோகோவை ‘X’ என மாற்றிய எலான் மஸ்க்!

Pagetamil

ருவிட்டருக்கு மாற்றாக மெட்டாவின் த்ரெட்ஸ் அறிமுகம்!

Pagetamil

Leave a Comment