தெலுங்கானாவில் வயலில் ஏர் உழுதுகொண்டிருந்தபோது, எருதுகளில் ஒன்று திடீரென இறந்ததால், அதற்குப் பதிலாக தனது மகனை எருதாகப் பூட்டி உழவு செய்திருக்கிறார் விவசாயி ஒருவர்.
டோங்கர்கம் கிராமத்தைச் சேர்ந்த அபிமன்யு என்ற அந்த விவசாயி தனது ஆறு ஏக்கர் நிலத்தில் உழவுப் பணிகளை மேற்கொண்டு இருந்தார். காலையிலிருந்து உழவு பணிகள் மேற் கொண்டிருந்த எருதுகளில் ஒன்று திடீரென உடல் நிலை பாதித்து சரிந்து விழுந்து பின்னர் மாலையில் இறந்தது.
மழை தொடங்குவதற்குள் பணிகளை முடித்தாக வேண்டிய நிலையில், புதிதாக எருது வாங்க கையில் பணமும் இல்லை. எனவே பள்ளி மாணவனான தனது மகனை, ஏரின் ஒரு பக்கத்தில் பூட்டி, உழவுப் பணியை முடித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1