அஜித்தின் வரலாறு படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்த கனிகா தற்போது சன் டிவியின் சீரியல் ஒன்றில் அறிமுகம் ஆக இருக்கிறார்.
தல அஜித் நடித்த வரலாறு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் கனிகா. அவர் தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் பல டாப் ஹீரோக்கள் உடன் நடித்து இருக்கிறார். மணிரத்னம் தயாரித்த பைவ் ஸ்டார் படம் மூலமாக தான் கனிகா சினிமாவுக்குள் வந்தார். அதன் பின் ஆட்டோகிராப், வரலாறு உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
கனிகாவை திரையில் பார்த்தே நீண்ட காலம் ஆகிவிட்டது என ரசிகர்கள் சொல்லி வரும் இந்த வேளையில் அவர் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வந்தது.
இந்நிலையில் கனிகா சீரியலில் களமிறங்கி இருக்கிறார். அவர் சன் டிவி தொடங்க இருக்கும் ஒரு புது சீரியலில் நடிக்க இருக்கிறார். கோலங்கள் சீரியல் புகழ் திருச்செல்வம் அடுத்து இயக்கும் புது சீரியலில் தான் கனிகா முக்கிய ரோலில் நடிப்பதாக தெரிகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் அந்த சீரியல் என்ன, கதை என்ன என்பது தெரியவரும்.