பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வித்தியாச வித்தியாசமாக பெயர் வைப்பார்கள். அவரவர் கொண்டிருக்கும் கொள்கை, குடும்ப வழக்கம், முன்னோர்களின் பெயர்கள், காரணப்பெயர், அழகான பெயர் என ஒவ்வொருவரின் ஒரு பெயருக்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கும். சிலர் மிக வித்தியாசமான பெயர்களை வைப்பார்கள், கொரோனா காலத்தில் குழந்தைகள் பிறந்த போது, கொரோனா, லாக்டவுண் என வித்தியாசனமான பெயர்கள் கூட பலர் வைத்தனர்.
இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் தற்போது ஆண் குழந்தை பெற்ற தந்தை Mac Pascual, ஐடி துறையில் பணியாற்றி வருகிறார். அவர் தன் குழந்தைக்கு HTML என பெயர் வைத்துள்ளார். இது குறித்து அந்த குழந்தையின் அத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் போட்ட பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து அவர் கூறும் போது : “எங்கள் குடும்பத்தில் வித்தியசமான பெயர்களை வைப்பதுவழக்கம். எனது பெயரில் உள்ள மேக் என்பதற்கு அதர்தம் மேக்ரூனி85, எனது தங்கையில் பெயர் ஸ்பகெட்டி 88, ஸ்பெகட்டிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களது பெயர்கள் சீஸ் பிமின்டோ, பர்மேஷன் சீஸ் என பெயரிட்டுள்ளனர். எனது ஒன்று விட்ட சகோதரர்களின் பெயர்கள் டிசைன் மற்றும் ரிசர்ச்”
இப்படியான வித்தியாசன மான பெயரை தற்போது நெட்டிசன்கள் கிண்டல் செய்துவருகின்றனர். பலர் அந்த சிறுவன் பள்ளியில் கிண்டல் செய்யப்படுவான் என கூறி வருகின்றனர்.