இந்தியா இந்து மத மக்கள் அதிகமாக வாழும் நாடு. இந்து மத நம்பிக்கையின் படி மகாவிஷ்ணு காக்கும் கடவுளாக அறியப்படுகிறார். ஆக்கும் கடவுள் பிரம்மா, காக்கும் கடவுள் விஷ்ணு, அழிக்கும் கடவுளாக சிவன் ஆகிய மூன்று கடவுள்கள்தான் முக்கியமானவர்கள். அதில் விஷ்ணுவிற்கு இந்தியாவில் ஏராளமான பக்தர்கள் இருக்கிறார்கள். பல கோவில்கள் உள்ளன. பலர் கடவுள் விஷ்ணுவை பல்வேறு பெயர்களில் வணங்குகின்றனர். ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா உலகின் மிகப்பெரிய விஷ்ணு சிலை இந்தியாவில் இல்லை.
உலகின் மிகப்பெரிய விஷ்ணு சிலை இஸ்லாமிய நாடான இந்தோனேஷியாவில் இருக்கிறது. இஸ்லாமிய நாட்டில் எப்படி விஷ்ணுவிற்கு உலகின் மிகப்பெரிய சிலையை நிறுவனர் என்று. இந்த சிலை உயரத்தில் மிகப்பெரியது. முழுவதும் காப்பர் மற்றும் பிராஸ் ஆகிய உலோகங்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதற்காக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அதை பற்றி தான் இந்த செய்தியில் முழுமையாக காணப்போகிறோம்.
இந்த சிலை சுமார் 122 அடி உயரமும், 64 அடி அகலமும் கொண்டது. இந்த சிலையை கட்ட எவ்வளவு ஆண்டுகள் ஆனது தெரியுமா? மொத்தம் 24 ஆண்டுகள் இந்த சிலை கட்டப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு தான் இந்த சிலை கட்டிமுடிக்கப்பட்டது. தற்போதுஇந்த சிலையை காண உலகம் முழுவதிலுமிருந்து ஆட்கள் இந்தோனேஷியாவிற்கு வந்து செல்கின்றனர்.
இந்த சிலை அமைக்கப்பட்டதற்கு பின்னால் உள்ள கதை மிகவும் சுவரஸ்யமானது. 1979ம் ஆண்டு பப்பா நியூமன் நியூர்ட்டா என்ற ஒரு சிற்ப கலைஞர் இந்தோனேஷியாவில் இருந்தார். அவர் இந்த உலகில் இவரை இல்லாத மிகப்பெரிய சிலையை வடிவமைக்கவேண்டும் என்றஉறுதியில் இருந்தார். அதற்கான ஆய்வுகளை செய்தார்.
அதன் பின்பு பல்வேறு திட்டங்கள் மற்றும் பல முயற்சிகள், பல மக்களை சந்தித்தது என இந்த சிலைக்காக பெரும் முயற்சியை மேற்கொண் அதற்கான நிதியையும் திரட்டி 1994ம் ஆண்டு இந்த சிலைய கட்டும் பணியை துவங்கினார். முதலில் மிக மெதுவாக தான் இந்த பணி துவங்கியது. இதற்கிடையில் 2007-2013 ஆண்டிற்கு இடையில் இந்த சிலை கட்டும் பணி நிறுத்தப்பட்டிருந்தது. 2013க்கு பிறகு முழு மூச்சாக இந்த சிலை கட்டி முடிக்கப்பட்டு விட்டது.
இந்த சிலை இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள உங்காசன் என்ற பகுதியில் இருக்கிறது. இந்த சிலையை கட்டமைத்த சிற்ப கலைஞர் ப்பா நியூமன் நியூர்ட்டா விற்கு இந்திய அரசு பெரும் கவுரவத்தை வழங்கியுள்ளது. அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதை வழங்கியுள்ளது. இன்று இந்த சிலையின் புகழ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து பலர் இந்த சிலையை காண இந்தோனேஷியாவிற்கு வருகின்றனர்.