சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனாவுக்கு ஆண் சிங்கம் உயிரிழந்துள்ளது. ஏற்கனவே வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனாவுக்கு பெண் சிங்கம் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒரு ஆண் சிங்கம் இறந்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலையில் வண்டலூர் பூங்கா பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி மறுக்கப்பட்டு மூடப்பட்டிருக்கிறது. பூங்கா ஊழியர்கள் மட்டுமே உள்ளே சென்று வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பதும், அதில் ஒரு சிங்கம் கொரோனாவால் உயிரிழந்ததும் தெரியவந்ததால், மற்ற சிங்கங்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன.
பூங்காவில் உள்ள 11 சிங்கங்களுக்கு பசியின்னை மற்றும் சளி தொந்தரவு இருப்பதால் அச்சிங்களுக்கு பரிசோதனை நடந்து வருகிறது. குரங்குகளையும் தனிப்படுத்தி வருகிறது பூங்கா நிர்வாகம்.இந்த நிலையில் கடந்த 5ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர் வைத்த பெண் சிங்கம் நிலா கொரோரானால் உயிரிழந்தது. இந்த சூழலில் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனாவுக்கு ஆண் சிங்கம் உயிரிழந்துள்ளது