உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. இதைத்தொடர்ந்து 3-வது இடத்தில் தென் அமெரிக்க நாடான பிரேசில் உள்ளது.கொரோனா வைரசின் இரண்டு அலைகளாலும் பிரேசில் மக்கள் அதிக பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர்.
இந்நிலையில், பிரேசில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 88,992 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,75,43,8539 ஆக அதிகரித்துள்ளது.
அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,760 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், அங்கு இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,91,164 ஆக உயர்ந்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1