அருண் விஜய் நடித்துள்ள ‘பார்டர்’ திரைப்படம் எப்போது ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அருண் விஜய், தற்போது நிதானமாக கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் ‘குற்றம் 23’ படத்திற்கு பிறகு அறிவழகன் இயக்கத்தில் அவர் நடித்து வெளியாக உள்ள திரைப்படம் ‘பார்டர்’. இரண்டாவது முறையாக அருண் விஜய் – அறிவழகன் கூட்டணி இணைந்துள்ளது. இந்த படத்தில் ரெஜினா கதாநாயகியாக நடித்துள்ளார். ஆன் இன் ஆல் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
கடந்த ஆண்டே தொடங்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது. இதையடுத்து தற்போது தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ராணுவம் தொடர்பான படமாக இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் திரையரங்க உரிமையை 11: 11 சினிமாஸ் பெற்றுள்ளது.
இந்த படத்தின் வித்தியாசமான ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த போஸ்டரில் தென் இந்தியா வரைப்படத்தில் அருண் விஜய் இருப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் திகதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 12ம் திகதி இந்த படம் உலக முழுவதும் திரையரங்கில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. திரையரங்க வெளியிட்டு பிறகு சோனி லைவ் ஓடிடி தளத்திலும் இப்படம் வெளியாகிறது.