கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் இரண்டு ஆண்டுகளாக காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தாமல் வனத்துறையினர் பிடித்துள்ளனர்
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த 7 மரம் பகுதிகளில் இரண்டு ஆண்டு காலமாக காட்டு யானை ஒன்று முதுகில் காயத்துடன் சுற்றி திரிந்தது. இதற்கு வனத்துறையினர் பழங்களில் மாத்திரை வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.இந்நிலையில் அந்த யானையை பிடித்து முதுமலைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளிப்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டு யானையை கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று புத்தர் வயல் பகுதியில் கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தாமல் கயிறு கட்டி யானையை பிடித்தனர். தற்போது மழை பெய்து வருவதால் யானையை முதுமலைக்கு கொண்டு செல்வதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது பின்பு இந்த யானை சிகிச்சை அளிப்பதற்காக முதுமலை கொண்டு செல்லப்படுகிறது.