27 C
Jaffna
January 11, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

மாகாண வைத்தியசாலைகளை பறிப்பது அரசியலமைப்பிற்கு முரண்; ஆனால் தடுக்கும் பலம் என்னிடமில்லை: கைவிரித்தார் டக்ளஸ்!

மாகாண சபைகளினால் நிர்வகிக்கப்பட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்வது அரசியலமைப்பிற்கு முரணானது. ஆனால் அதை தடுத்து நிறுத்தும் அரசியல் பலம் தன்னிடமில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் இன்று(16) ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, மாகாணசபையினால் நிர்வகிக்கப்பட்டு வந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உட்பட ஒன்பது மாவட்ட பொது வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கம் பறித்தெடுத்துள்ளது தொடர்பில் கருத்து தெரிவித்த போது மேற்படி கருத்தை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த விடயம் தொடர்பாக தன்னுடைய ஆட்சேபனையை பதிவு செய்த கடற்றொழில் அமைச்சர், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில், 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக அதிகாரங்கள் மாகாண சபைக்கு பகிரப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரப் பகிர்வின் அடிப்படையில், மாவட்ட பொது வைத்தியசாலைகள், கிராமிய வைத்தியசாலைகள் மற்றும் மகப்பேற்று நிலையங்கள் போன்றவை மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அவற்றை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்வது அரசியலமைப்பிற்கு முரணானது என்பதுடன் மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வினை எதிர்பார்க்கின்ற மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் செயற்பாடாகவும் அமையும் என்றும் அமைச்சரவைக்கு சுட்டிக்காட்டினேன்.

கருத்துக்களை ஏற்றுக்கொண்ட அமைச்சரவை, மாவட்டங்களுக்கான சுகாதார வசதிகளை உயர் தரத்தில் வழங்கும் நோக்குடனேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், விசேட குழுவொன்றினை அமைத்து, இதுதொடர்பாக ஆராயப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.

கடந்த காலங்களில் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது, அக்காலப் பகுதியில் எனக்கிருந்த அரசியல் பலத்தினைப் பயன்படுத்தி, மாகாண சபைக்கு பகிரப்பட்ட அதிகாரங்கள் மத்திய அரசாங்கம் எடுத்துக் கொள்வதை தடுத்து நிறுத்தினேன்.

எனினும், தற்போதைய அரசியல் சூழலில் இவ்வாறான விடயங்களை தடுத்து நிறுத்தக் கூடிய அரசியல் பலம் என்னிடம் இல்லை. மக்களின் தீர்க்கதரிசனமற்ற தீர்மானங்களின் விளைவு, இவ்வாறான நிகழ்வுகளை தவிர்க்க முடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர்: அமெரிக்காவின் புதிய மாநிலமாக இணைய ட்ரம்ப் அழைப்பு!

Pagetamil

முல்லைத்தீவில் கரையொதுங்கியவர்கள் உண்மையான அகதிகளா என ஆராய்கிறதாம் அனுர அரசு!

Pagetamil

முக்கிய தீர்மானங்கள் இல்லை… வழக்கம் போல கூடிக்கலைந்தது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி!

Pagetamil

அனுர ஜன.13- 17 வரை சீன விஜயம்!

Pagetamil

கற்பனைக் குதிரைக்கு வயது 75

Pagetamil

Leave a Comment