25.4 C
Jaffna
March 4, 2025
Pagetamil
உலகம்

பாலஸ்தீனத்தின் காசாமுனை மீது மீண்டும் இஸ்ரேல் வான் வழித்தாக்குதல்

இஸ்ரேல் பகுதியில் தீப்பிடிக்கும் வகையை சேர்ந்த பலூன்களை பறக்கவிட்டதற்கு பதிலடியாக தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

மேற்காசியாவை சேர்ந்த நாடுகளான இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த மாதம் இஸ்ரேலில் உள்ள ஜெருசலேமில் வெளியேற்ற பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் முயற்சி செய்ததால் மோதல் வெடித்தது.

இதையடுத்து பாலஸ்தீனத்தின் காசாமுனை பகுதியை நிர்வகித்த ஹமாஸ் போராளி அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை மற்றும் வான்வழித்தாக்குதலில் ஈடுபட்டது.

இருதரப்பினரும் மாறி மாறி ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் காசா முனையில் உள்ள ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டது. குழந்தைகள் உள்பட 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தலையீட்டையடுத்து இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனால் 11 நாட்கள் நடந்த சண்டை முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் காசாமுனை பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் வான் வழித்தாக்குதல்களை நடத்தி உள்ளது. இன்று அதிகாலை காசாவில் பல இடங்களில் குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டன என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காசா மீதான வான்வழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது. இதற்கு இஸ்ரேல் பகுதியில் தீப்பிடிக்கும் வகையை சேர்ந்த பலூன்களை பறக்கவிட்டதற்கு பதிலடியாக தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் போராளி அமைப்பின் வானொலி நிலையம் கூறும்போது, பாலஸ்தீனிய பயிற்சி முகாமை குறி வைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் புதிய கூட்டணி அரசாங்கம் நேற்று முன்தினம் பதவி ஏற்றது. பிரதமராக நப்தாலி பென்னட் பொறுப்பேற்றார். இந்த நிலையில் புதிய அரசுபொறுப் பேற்ற மறுநாளே காசாமுனை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘இந்த ஆள் அமைதியை விரும்பவில்லை’: மீண்டும் ஜெலென்ஸ்கியை விமர்சித்த டிரம்ப்!

Pagetamil

ரஷ்யா மீதான தடைகளின் ஒரு பகுதியை தளர்த்தும் திட்டத்தை தயாரிக்கிறது அமெரிக்கா!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அழைப்பு

Pagetamil

இனி அமெரிக்க இராணுவத்தில் மாற்றுப் பாலினருக்கு இடமில்லை

Pagetamil

Leave a Comment