நாட்டில் நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்களில், கொழும்பு மாவட்டத்தில் இருந்தே அதிகமானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் இருந்து 546 பேர், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 268 பேர், கம்பஹா மாவட்டத்தில் இருந்து 250 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 96 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து 89 பேர், மாத்தறை மாவட்டத்தில் இருந்து 88 பேர், மத்தளை மாவட்டத்தில் இருந்து 79 பேர், அம்பாறை மாவட்டத்தில் இருந்து 51 பேர், பதுளை மாவட்டத்தில் இருந்து 41 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 22 பேர், கேகாலை, புத்தளம் மாவட்டத்தில் இருந்து தலா 21 பேர், வவுனியா மாவட்டத்தில் இருந்து 17 பேர், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து 15 பேர், அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து 10 பேர், மொனராகலை, திருகோணமலை, மன்னார் மாவட்டங்களில் இருந்து தலா 2 பேர், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து தலா ஒவ்வொருவர் அடையாளம் காணப்பட்டனர்.
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 59 பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.