29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
தொழில்நுட்பம்

உலகிலேயே முதல் முறையாக செயற்கைக்கோள் இந்த பொருளிலா! எந்த நாடு இதை செஞ்சிருக்காங்க தெரியுமா? WISA Woodsat

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) உலகின் முதல் மர செயற்கைக்கோளான Wisa Woodsat செயற்கைக்கோளை இந்த ஆண்டின் இறுதிக்குள் பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளது. விண்கல கட்டமைப்புகளில் ஒட்டு பலகை (plywood) போன்ற மரப் பொருட்களைச் சோதித்து, வெப்பம், குளிர், வெற்றிடம் மற்றும் கதிர்வீச்சு போன்ற தீவிர விண்வெளி நிலைமைகளுக்கு நீண்ட காலத்திற்கு அதை வெளிப்படுத்தி அதன் பொருந்தக்கூடிய தன்மையை சோதனை செய்வதே இந்த செயற்கைக்கோளின் நோக்கம் ஆகும்.

இது 2021 ஆம் ஆண்டின் இறுதியில் நியூசிலாந்தில் உள்ள மஹியா தீபகற்ப ஏவுதள வளாகத்திலிருந்து ராக்கெட் லேப் எலக்ட்ரான் ராக்கெட் மூலம் விண்வெளியில் செலுத்தப்படும்.

பின்லாந்தில் வடிவமைக்கப்பட்டு மற்றும் கட்டமைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் சுமார் 500-600 கி.மீ உயரத்தில் துருவ சூரிய-ஒத்திசைவான சுற்றுப்பாதையில் சுற்றும். WISA Woodsat என்பது 10x10x10 செ.மீ நானோ செயற்கைக்கோள் ஆகும், இது தரப்படுத்தப்பட்ட பெட்டிகள் மற்றும் ஒட்டு பலகைகளிலிருந்து தயாரிக்கப்படும் மேற்பரப்பு பேனல்கள், வன்பொருட்கள் அல்லது தளபாடங்கள் ஆகியவற்றை கொண்டிருக்கும்.

வடிவமைப்பாளர்கள் மரத்தை ஒரு வெப்ப வெற்றிட அறையில் (thermal vacuum chamber) வைத்துள்ளனர். மரத்திலிருந்து வரும் நீராவியைக் குறைக்கவும், அணு ஆக்ஸிஜனின் அரிப்பு விளைவுகளிலிருந்து பாதுகாக்கவும் மிக மெல்லிய அலுமினிய ஆக்சைடு அடுக்கையும் சேர்த்துள்ளனர்.

Woodsat செயற்கைகோளின் மரமற்ற வெளிப்புற பாகங்கள் மட்டுமே மூலைப்பகுதியில் அலுமினிய தண்டவாளங்களுடன் விண்வெளியில் பயன்படுத்தப்படுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் ஒரு உலோக செல்ஃபி ஸ்டிக் இதனுடன் வைக்கப்பட்டுள்ளது. அதன் கேமராவுடன் செல்ஃபி ஸ்டிக் செயற்கைக்கோளின் படங்களை எடுத்து ஒட்டு பலகை எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்காணிக்க உதவும்.

வடிகட்டப்படாத சூரிய ஒளியில் இருந்து வெளியாகும் புற ஊதா கதிர்வீச்சினால் மரபொருட்கள் கருமையடைகிறதா என்று பார்க்கவும், ஒட்டு பலகையில் ஏதேனும் விரிசல் இருக்கிறதா என்பதை கண்டறியவும் அல்லது ஏதேனும் நிறம் மாற்றம் இருக்கிறதா என்பதை கண்டறியவும் இந்த கேமரா உடனான செல்ஃபி ஸ்டிக் உதவியாக இருக்கும் என்று பின்னிஷ் எழுத்தாளரும் ஒளிபரப்பாளருமான ஜாரி மக்கினென் (Jari Makinen) தெறிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மைக்ரோசொப்ட் விண்டோஸ் செயலிழப்பு – ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ சிக்கலும், சில புரிதல்களும்

Pagetamil

இந்தியராணுவத்தில் 51 கிலோ எடை கொண்ட ரோபோ நாய்கள்!

Pagetamil

Gemini AI மொடல் அறிமுகம்: AI ரேஸில் முந்தும் கூகுள்?

Pagetamil

ருவிட்டரின் லோகோவை ‘X’ என மாற்றிய எலான் மஸ்க்!

Pagetamil

ருவிட்டருக்கு மாற்றாக மெட்டாவின் த்ரெட்ஸ் அறிமுகம்!

Pagetamil

Leave a Comment