Pagetamil
முக்கியச் செய்திகள்

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதர் ஜூலி சுங்!

இலங்கை மற்றும் மாலத்தீவிற்கான தூதராக ஜூலி சுங்கை நியமிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் அறிவித்துள்ளார்.

உலக அரங்கில் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய 4 தூதர்களை, ஜனாதிபதி பிடன் பரிந்துரைத்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தூதராக  ஜூலி ஜியுன் சுங்  பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

மூத்த வெளியுறவு சேவையின் தொழில் உறுப்பினரான ஜூலி சுங், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் மேற்கு அரைக்கோள விவகார பணியகத்தின் செயல் உதவி செயலாளராக உள்ளார்.

அவர் முன்பு திணைக்களத்தில் ஜப்பானிய விவகார அலுவலகத்தின் இயக்குநராக இருந்தார்.

கம்போடியாவின் புனோம் பென் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துணைத் தலைவராகவும், தாய்லாந்தின் பாங்கொக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

முன்னதாக, ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இடைநிலை ஒருங்கிணைப்பாளருக்கு சுங் தலைமை பணியாளராக இருந்தார்.

கொலம்பியா, வியட்நாம் மற்றும் ஜப்பானில் உள்ள அமெரிக்க தூதரகங்களிலும், சீனாவின் குவாங்சோவில் உள்ள அமெரிக்க தூதரகத்திலு பணியாற்றியுள்ளார்.

கலிபோர்னியா-சான் டியாகோ பல்கலைக்கழகம் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச மற்றும் பொது விவகார பாடசாலையில் பட்டம் பெற்றவர்.

திணைக்களத்தின் சிறப்பு மரியாதை விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். சுங் கொரிய, ஜப்பானிய, ஸ்பானிஷ் மற்றும் கெமர் மொழி பேசும் திறன் கொண்டவர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

3 கட்சிகளாக அல்ல; சங்கு கூட்டணியாக பேச்சு நடத்த தயார்: தமிழரசுக்கு பதில்!

Pagetamil

இன்று வழக்கம் போல எரிபொருள் விநியோகம்!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

நீண்ட வரிசைகள்: எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென்கிறது பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Pagetamil

சங்கு கூட்டணியில் இணையாமலிருக்க தமிழ் மக்கள் கூட்டணி, ஐங்கரநேசன் தரப்பு தீர்மானம்: பணம் வழங்குபவர்களின் அழுத்தத்தால் முடிவு?

Pagetamil

Leave a Comment