காதலருடன் சென்று நட்சத்திர ஓட்டலில் போதைப்பொருள் பயன்படுத்திய தமிழ் பட நடிகை கைது!

Date:

மும்பையில் ஐந்து நட்சத்திர ஓட்டலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக தமிழ் பட நடிகை ஒருவர் காதலருடன் கைது செய்யப்பட்டார்.

மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த பிறந்தநாள் விழா ஒன்றில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது பெண் ஒருவர் ஆண் நண்பருடன் சந்தேகப்படும் படியாக அங்குள்ள அறைக்கு சென்றதை கண்டனர். இதையடுத்து போலீசார் அந்த அறைக்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு நடிகை நைய்ரா ஷா என்பவர் சிகரெட்டில் சரஸ் என்ற போதைப்பொருளை புகைத்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் நடிகை நைய்ரா ஷா மற்றும் அவரது காதலரை பிடித்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதில் அவர்கள் இருவரும் போதைப்பொருள் உட்கொண்டது உறுதியானது.

இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அந்த நடிகையும் அவரது காதலரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். நடிகை நைய்ரா ஷா, மிருகா என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கறிவேப்பிலை பறித்தவர் உயிரிழந்தார்

யாழ்ப்பாணத்தில் நேற்று (01) கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே...

கிளிநொச்சியில் திடீர் வாகனப் பரிசோதனை

கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸ் பிரிவினரின் உதவியுடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் செல்லும்...

எரிபொருள் விலை சிறிது அதிகரிக்கும்: ஜனாதிபதி

மத்திய கிழக்கில் நிலவிவரும் சூழ்நிலை காரணமாக, இலங்கையில் அண்மைக்காலத்தில் எரிபொருள் விலையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்