190 நாடுகள், 17 மொழிகள்… பிரம்மாண்டமாக வெளியாகும் ‘ஜகமே தந்திரம்’!

Date:

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் 190 நாடுகள் மற்றும் 17 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 18-ம்  வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். வித்தியாசமான கேங்ஸ்டர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இன்னும் இரு தினங்களில் ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியாக இருப்பதால் படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. தற்போது ஜகமே தந்திரம் திரைப்படம் 190 நாடுகள் மற்றும் 17 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.

190 நாடுகள், 17 மொழிகள்... பிரம்மாண்டமாக வெளியாகும் 'ஜகமே தந்திரம்'... என்னென்ன மொழிகள் தெரியுமா!?

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, இங்கிலீஷ், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், பொலீஸ் போர்ச்சுகீஸ் பிரசிலியன் ஸ்பானிஷ், ஸ்பானிஷ்(நியூட்ரல்), தாய் இந்தோனேஷியன், வியட்நாமிஸ் உள்ளிட்ட 17 மொழிகளில் வெளியாக உள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் நாடளாவிய மின்வெட்டு! மின்சார விநியோகத்தை மீளமைக்கும் பணிகள் தீவிரம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (17) மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய...

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்