26.3 C
Jaffna
December 19, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

யாழில் மேலுமொரு சிகிச்சை மையம் திறப்பு!

யாழ் நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் இன்றைய தினம் திறந்துவைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

யாழ் மாவட்டத்திற்கு செயலகத்திற்கு சொந்தமான நெல் களஞ்சியத்தில் தற்போது யாழ் மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்களை பராமரிக்கவென 200 கட்டிகளுடன் தயார்படுத்தப்பட்டுள்ள குறித்த இடைத்தங்கல் பராமரிப்பு நிலையமானது இன்றைய தினம் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி, அரச அதிபரினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், வடக்கு மாகாண சுகாதார திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, யாழ் மாவட்ட மக்களின் செயற்பாடுகளாலேயே யாழில் தொற்று அதிகரித்ததாக தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த காலத்தை விட தற்பொழுது தொற்றுஅதிகரிக்கும் நிலை காணப்படுகின்றது. யாழ்ப்பாண மாவட்டத்திலே சில ஆலயங்களில் சுகாதார பிரிவினரின் கட்டுப்பாடுகளை மீறி ஆலய உற்சவங்கள் நடத்தப்பட்டமையாலேயே தொற்று நிலைமை அதிகரித்தது.

தற்போதும் சில இடங்களில் திருமண நிகழ்வுகள் வீடுகளில் சுகாதார பிரிவின் அனுமதி இல்லாமல் மேற்கொள்ளப்படுகின்றது. எனவே மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்த பயணத்தடை என்பது மக்களை தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காகவே. எனவே பொதுமக்கள் இந்த பயணத்தடை காலத்திலாவது சுகாதாரப் பிரிவினரின் கட்டுப்பாடுகளுடன் வீடுகளில் இருப்பது மிகவும் சிறந்ததாகும்.

இன்றைய தினம் பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கவென சிகிச்சை நிலையத்தினை திறந்து வைத்திருக்கின்றோம். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், மாகாண பணிப்பாளர் மற்றும் ஏனைய சுகாதாரப் பிரிவினர் மற்றும் நமது இராணுவத்தினரின் முயற்சியின் பயனாக இன்றையதினம் இந்தப் இடைக்கால சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த சிகிச்சை நிலையத்தில் 200 கட்டில்கள் உள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பொதுமக்கள் சுகாதார பிரிவினருடன் இணைந்து யாழ் மாவட்டத்தில் தொற்றை இல்லாதொழிக்க உதவ முன்வரவண்டும் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அரச வைத்தியர்களின் ஓய்வு வயது நீடிப்பு

east tamil

எட்கா ஒப்பந்தம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் – கலாநிதி நந்தலால் வீரசிங்க

east tamil

2025 பெப்ரவரி முதல் தனியார் வாகன இறக்குமதிக்கு அனுமதி!

Pagetamil

அர்ச்சுனாவை நாடாளுமன்றத்திலிருந்து தகுதி நீக்குங்கள்: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு!

Pagetamil

புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன தெரிவு!

Pagetamil

Leave a Comment