நடிகர் பிரேம்ஜி நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரேம்ஜி மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். தன்னுடைய அண்ணனின் படங்களில் மட்டுமே தோன்றி வந்த பிரேம்ஜி தற்போது வேறு இயக்குநர்களின் படங்களிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கத்தில் உருவாகி வரும் ‘சத்திய சோதனை’ படத்தில் பிரேம்ஜி நடித்து வருகிறார்.
தற்போது பிரேம்ஜி கதாநாயகனாக நடிக்கும் அடுத்த படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் பிரேம்ஜி வாயில் சிகரெட் உடனும் கையில் மதுபாட்டிலுடனும் இருக்கிறார். இந்தப் படத்திற்கு தமிழ் ராக்கர்ஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தலைப்பு தமிழ் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
இப்படத்தில் எஸ்.பி.பி.சரண், விடிவி கணேஷ், நாஞ்சில் சம்பத், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை ஜஸ்வந்த் சூப்பர் சின்மாஸ் சார்பில் கே.பிச்சாண்டி தயாரித்துள்ளார். இந்தப் படத்தை பரணி ஜெயபால் இயக்கியிருக்கிறார். பிரேம்ஜி இந்தப் படத்திற்கு இசையமைக்கவும் செய்துள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து ரிலீசுக்குத் தயாராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.