அனைவரும் தாமாக முன்வந்து ரத்த தானம் செய்யவேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார்.
இன்று(ஜூன் 14) ரத்த தான தினமாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில் ரத்த தானத்தின் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தினம் உருவாக்கப்பட்டுள்ளது. நம்முடைய ரத்த தானம் ஒருவரின் உயிரைக் காப்பாற்றக் கூடிய சக்தி படைத்தது. எனவே பலரும் ரத்த தானம் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பலரும் ரத்த தானம் செய்ய வலியுறுத்தியும் வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில் “உலகம் உயிர்த்திருக்க குருதிக் கொடை அவசியம். நெருக்கடி காலகட்டத்தில் குருதிக் கொடையாளர்களைக் கண்டறிவதிலும் குருதி பெறுவதிலும் சவால்கள் நிறைந்துள்ளன. வாய்ப்புள்ள ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து தானம் செய்யவேண்டுமென உலக ரத்த தான தினத்தில் கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.