உலகிலேயே மிகப்பெரிய குடும்பமாக கருத்தப்பட்ட குடும்பம் மிசோரம் மாநிலத்தில் உள்ள ஜினா சானா என்பவரது குடும்பம் தான். இவருக்கு 38 மனைவிகள், 89 குழந்தைகள் 33 பேரக்குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். அதனால் உலகிலேயே மிகஅதிக எண்ணிக்கை நபர் கொண்ட ஒன்றாக வாழும் குடும்பமாக இவரது குடும்பம் தான் இருந்தது.
76 வயதாகும் ஸியோனா சன்னாவின் குடும்பம் 4 அடுக்கு 100 ரூம்கள் கொண்ட வீட்டில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் நேற்று (ஜூன் 13ம்) ஜினா சானா உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். இவர் இறந்த விபரத்தை அம்மாநில முதல்வர் ஸோரம் தங்க என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதை வெளியிட்டுள்ளார்.
அதன் அவர் குறிப்பிடள்ளதாகவதும். “கணத்தை இதயத்துடன் இதை சொல்கிறேன். உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவராக இருந்த மிஸ்டர் ஜினா 38 மனைவிகள், 89 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தவர் நம்மை விட்டு மறைந்து விட்டார். அவர் குடும்பம் இருந்த பக்தவாங் தலானுகம் என்ற கிராமமம் இவர்களது குடும்பத்தினராலேயே இம்மாநிலத்தின் மிகப்பெரிய டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாறியது. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன். ” என குறிப்பிட்டிருந்தார்.
உலக அளவில் புகழ் பெற்ற இந்த குடும்பத்தின் தலைவர் தற்போது மறைந்துள்ளது. பலருக்குஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலகில் பல இடங்களிலிருந்து இவரின் மறைவிற்கு இரங்கல் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன