24.8 C
Jaffna
January 6, 2025
Pagetamil
லைவ் ஸ்டைல்

தேன்: தேவைக்கு அதிகமானால் ஆபத்தா!

தேன் ஆரோக்கியம் நிறைந்த இனிப்புப் பொருளாகும். ஆனால் தேனில் சர்க்கரை இல்லாமல் இல்லை. இயற்கைத் தன்மை கொண்ட இனிப்பு தேனில் அதிகமாக இருக்கிறது. அதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடல் நலனுக்கு ஆபத்தை விளைவித்துவிடும். பிரக்டோஸ், குளுக்கோஸ், தண்ணீர் போன்றவை தேனில் இருக்கும் முக்கிய பொருட்களாகும். என்சைம்கள், பி விட்டமின்கள், அமினோ அமிலங்கள், தாதுக்கள், ஆன்டிஆக்சிடென்டுகள் மற்றும் விட்டமின் சி ஆகியவையும் தேனில் உள்ளன.

இயற்கையான ஆன்டிமைக்ரோபியல் பண்புகளும் தேனில் இருக்கின்றன. அவை காயங்களை விரைவாக குணப்படுத்தும் தன்மை கொண்டது. இருமல், தொண்டை புண் பிரச்சினைக்கும் நிவாரணம் தரும். கொரோனா வைரஸ் தொற்றுவில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு பயன்படுத்தும் இயற்கை பொருட்களில் ஒரு அங்கமாக தேனும் இருந்துகொண்டிருக்கிறது. அதே வேளையில் தேனை தினமும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் உபயோகிப்பது பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

அதிகரிக்கும் சர்க்கரை:

இயற்கை இனிப்பான தேனில் கார்போஹைட்ரேட்டும் உள்ளது. அது ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும் தன்மை கொண்டது. ஆதலால் நீரிழிவு நோயாளிகள் தேனை எச்சரிக்கையுடன் உட்கொள்ள வேண்டும். தேனை உபயோகிப்பதாக இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

எடை அதிகரிப்பு:

தேனில் உள்ள கார்போஹைட்ரேட்டும், சர்க்கரையும் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். மேலும் தேனை அதிகமாக உட்கொள்வது கலோரி எண்ணிக்கையையும் அதிகரிக்க செய்துவிடும்.

பற்களில் பாதிப்பு:

தேனை அதிகமாக உட்கொள்வது என்பது சர்க்கரையை அதிகமாக சாப்பிடுவதாக அர்த்தமாகிவிடும். அது வாய்வழி சுகாதாரத்திற்கு நல்லதல்ல. தேன் எளிதாக பற்களில் ஒட்டும் தன்மை கொண்டது. ஆதலால் தேன் உட்கொண்டதும் நன்றாக வாய் கொப்பளித்துவிட வேண்டும். இல்லாவிட்டால் பற்களில் படிந்து பற்சிதைவுக்கு வழிவகுத்துவிடும்.

வயிற்றுப் பிடிப்பு:

தேன் சாப்பிட்டால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும். வயிற்றுப் பிடிப்பும் தோன்றலாம். தேன், சர்க்கரை போன்ற இனிப்புகளை குறைவாகவே உட்கொள்ளவேண்டும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன்தான் உபயோகிக்க வேண்டும். மற்றவர்களும் இந்த அளவைத்தான் பின்பற்ற வேண்டும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment