நடிகர் ரஜினிகாந்த் மருத்துவப் பரிசோதனைக்காக தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகளில் ஈடுபட்டு வந்த போது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பின்னர் சிகிச்சை பெற்று குணமாகி மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தான் அரசியலிலும் இறங்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
ரஜினி உடல்நலப் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று வருவது வழக்கம்தான். தற்போது விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் இந்த முறை தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது மேலும் அங்கு சில காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளாராம். ரஜினியுடன் அவரது குடும்பத்தினரும் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த அமெரிக்க பயணத்திற்காக ரஜினி தரப்பிலிருந்து மத்திய அரசிடம் பேசி சிறப்பு அனுமதியும் பெற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்க சென்று வந்தவுடன் எந்த இயக்குனருடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக நிலவி வருகிறது. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் பேசி வருகின்றன.