25.9 C
Jaffna
December 28, 2024
Pagetamil
மலையகம்

காதைப் பொத்தி போட்ட கங்காணி!

தலவாக்கலை- வட்டகொடை தோட்டத்தில் கள உத்தியோகஸ்தர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம், ஜூன் 12ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது.

கள உத்தியோகஸ்தர் மீது, அத்தோட்டத்தைச் சேர்ந்த தலைவரொருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். இச்சம்பவத்தை கண்டித்து, கள உத்தியோகஸ்தர்களும் ஏனைய உத்தியோகஸ்தர்களும் இன்று (14) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னத்தில் அறைவாங்கிய கள உத்தியோகஸ்தர், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், நுவரெலியா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான அந்த கங்காணிக்கு எதிராக தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைபாடுகளை ஏற்றதன் பின்னர், அக்கங்காணி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தேயிலை மலைகளில் வருடத்துக்கு ஒருதடவை, நிறைகள் மாற்றப்படும். தோட்ட நிர்வாகத்தின் பணிப்பின் பேரிலும் ஒப்புதலின் அடிப்படையிலுமே அவ்வாறு செய்யப்படும், அதேபோல இம்முறையும் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தின் போது, குறிப்பிட்ட அந்த தோட்டத் தலைவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் வீதியோரங்களிலும் அல்லது கூடுதலாக கொழுந்துகளை பறிக்கக்கூடிய வகையிலான நிறைகள் கிடைக்கவில்லையென அறியமுடிகின்றது.

எனினும், நிறைகளை பிரித்துகொடுத்து, ஒருவாரம் கடந்துவிட்டது. அந்த ஒருவாரமும் சகலரும் எவ்விதமான பிரச்சினைகள் இன்றி, கொழுந்துகளை பறித்துள்ளனர்.

இந்நிலையிலேயே கடந்த 12ஆம் திகதியன்று, அந்த மலைக்கு பொறுப்பாகவிருந்த கள உத்தியோகஸ்தருடன், மேற்படி தோட்டத்தலைவர் தகராறு செய்து, கன்னத்தில் அறைந்துள்ளார்.

ஒருபக்க கா​துடன் சேர்த்து கனீரென சத்தம் கேட்கும் அளவுக்கு கன்னத்தில் அறைந்தமையால், கள உத்தியோகஸ்தர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மேற்படி விவகாரம் உள்ளிட்ட உத்தியோகஸ்தர்கள் மீதான தொழிலாளர்களின் அடாவடித்தனங்கள் குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம் என இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் உதவித் தலைவர் இளையராஜா தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பதுளைக்கு விஷேட ரயில் சேவை

east tamil

கந்தபொல மற்றும் மகஸ்தோட்டையில் 500 குடும்பங்களுக்கு நிவாரணம்

east tamil

2 சிறுத்தைக் குட்டிகள் மீட்பு!

Pagetamil

போலி நாணயத்தாள்களுடன் கைதான பாடசாலை மாணவர்கள்

Pagetamil

நானுஓயாவில் வீதியைவிட்டு விலகிய லொறி மண்மேட்டில் மோதி விபத்து

east tamil

Leave a Comment