யாழ்ப்பாணம், குருநகரில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி திருமணம் நடத்தப்பட்டதால் மணமக்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இன்று (14) காலை இந்த சம்பவம் நடந்தது.
குருநகர் பகுதியில் இன்று திட்டமிடப்பட்ட திருமணமொன்றிற்கு சுகாதார அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டது. 15 பேருடன் திருமணத்தை நடத்த அனுமதிக்கப்பட்டது.
இன்று காலை திருமணம் நடந்து கொண்டிருந்த போது, அந்த பகுதியிலுள்ள ஒருவர், பொலிஸ் அவசர இலக்கத்தை தொடர்பு கொண்டு, சுகாதார விதிமுறைகளை மீறி திருமண நிகழ்வு நடப்பதாக முறையிடப்பட்டது.
இதனடிப்படையில் பொலிசாரும், சுகாதார பரிசோதகர்களும் அந்த வீட்டிற்கு சென்றனர். அங்கு 16 பேர் நின்றனர். பின்னர் திருமணம் நடக்கவிருந்த தேவாலயத்திற்கு சென்றனர். அங்கு 12 பேர் நின்றனர்.
முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டதை போல அங்கு பெருமளவானவர்கள் குவிந்திருந்து, பொலிசாரை கண்டதும் தலைமறைவானார்களா என்பதற்கான ஆதாரங்களும் இருக்கவில்லை. வீடியோ, புகைப்படங்களும் ஆட்களை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
இதனால் மணமக்கள், குடும்ப அங்கத்தவர்கள் ஒரே வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர்.