26.3 C
Jaffna
January 26, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

அடுத்த சில நாட்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்!

அடுத்த சில நாட்களில் நாளாந்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போதைய மட்டத்திலிருந்து அதிகரிக்கும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய சுகாதார அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தலைவர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் கூறுகையில், கடந்த காலங்களில் தினசரி தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் சில நாட்களில், இது மீண்டும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

இந்தியாவின் மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் தினமும் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கை வீதம் அதிகம் என்றும் கூறினார்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தைத் தொடர்ந்து, தினசரி எண்ணிக்கை சீராக அதிகரித்தது, இருப்பினும் பயணக் கட்டுப்பாடுகளை விதித்ததன் காரணமாக நிலைமையைக் கட்டுப்படுத்த முடிந்தது.

ஒரு நாளில் 3,500 என்ற மிக உயர்ந்த எண்ணிக்கையை குறைத்த போதிலும், நிலையான வீழ்ச்சியைக் காணும் முன் தினசரி தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் உயரும் எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.

பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் மட்டுமல்லாமல், அமைச்சால் வழங்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க எதிர்பார்க்கப்படும் மக்களின் நடத்தை மூலமாகவும் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையையும் பரவலையும் கட்டுப்படுத்த முடியும் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யோஷித ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

Pagetamil

தமிழ் கட்சிகளிற்கிடையிலான சந்திப்பு 27ஆம் திகதிக்கு தள்ளிவைப்பு!

Pagetamil

தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகளும், வெட்டுப்புள்ளியும் வெளியீடு!

Pagetamil

அட்டகாசத்தில் ஈடுபட்ட அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

Leave a Comment