வெலிகம பிரதேசத்தில் கடற்கரையில் ரூ .2 பில்லியனுக்கும் அதிகமான 200 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய 9 பெர் பொலிசார் கைது செய்ப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திலிருந்து ஒரு சிறிய பல நாள் மீன்பிடி படகையும் பொலிசார் பறிமுதல் செய்தனர்.
எரிவாயு சிலிண்டர், சாக்குகளில் சூட்சுமமாக மறைத்து இவை எடுத்து வரப்பட்டுள்ளன.
மே 11 அன்று மீன்பிடிக்க புறப்பட்ட பல நாள் மீன்பிடி ரோலரின் மூலம் இந்த போதைப்பொருட்கள் கொண்டு வரப்பட்டன, பின்னர் அவர்கள் போதைப்பொருள் ஏற்றப்பட்ட ஒரு சிறிய கப்பலுடன் கடற்கரைக்கு வந்தபோது கைது செய்யப்பட்டனர் என்று பொலிசார் தெரிவித்தனர்.
இலங்கை கடற்படை, கடலோர காவல்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகம் ஆகியவை அரச புலனாய்வு சேவைக்கு கிடைத்த குறிப்பின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.