ரஷ்யா : குழந்தைகளிடம் மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து சோதனை!

Date:

ரஷ்யாவில் முக்கு வழியாகச் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து சோதனை குழந்தைகளிடம் நடந்துள்ளது.தற்போதைய இரண்டாம் அலை கொரோனா பரவலில் இளைஞர்களுக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுப் பல இளைஞர்கள் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர். இந்நிலையில் விரைவில் மூன்றாம் அலை கொரோனா பரவலாம் எனவும் அப்போது 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அதிக அளவில் பாதிப்பு இருக்கும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி அமெரிக்காவில் 12-17 வயதான குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் 2-11 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட அனுமதி கோரி பிஃபைஸர் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. ஆனால் மிகவும் சிறிய குழந்தைகளுக்குத் தடுப்பூசியை விட மூக்கு வழி செலுத்தும் மருந்து நல்லது எனக் கருத்து உள்ளது.

ரஷ்யாவில் 8-12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான மூக்கு வழி செலுத்தும் கொரோனா மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை ஸ்புட்னிக் வி தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிண்ட்ஸ்பெர்க் என்னும் விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார். இந்த மருந்து சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளதாகத் தெரிவித்த விரைவில் இதற்கு அனுமதி கிடைத்து செப்டம்பர் மாதம் வெளிவரும் எனக் கூறி உள்ளார்.

 

spot_imgspot_img

More like this
Related

கரூரில் தவெகவின் அலட்சியத்தால் உயிரிழந்த 31 பேருக்கு அரசுப்பணி!

கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரில் 31 பேருக்கு...

“கரூரில் களத்தில் நின்று காப்பாற்றியது யார், தனி விமானம் பிடித்து ஓடியது யார்?” – செந்தில் பாலாஜி

“திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள், அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட...

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்