மாநாடு படத்தின் ட்ரைலர் பக்ரீத் பண்டிகைக்கு வெளியாக இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது.
மாநாடு படத்திற்கு கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. எனவே இந்தப் படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் கார்த்திருக்கின்றனர். ஜூன் 21-ம் தேதி மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக இருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் மாநாடு படத்தின் ட்ரைலருக்கும் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தப் படத்தில் சிம்பு அப்துல் காலிக் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எனவே படத்தின் அப்டேட்களை இஸ்லாமிய பண்டிகை தினங்களின் வெளியிட படக்குழு ஆர்வம் காண்பித்து வருகின்றனர். மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக்கையும் ரம்ஜான் தினத்தில் தான் வெளியிடுவதாக இருந்தது. ஆனால் எதிர்பாராத சில காரணங்களால் அது தள்ளிப் போனது.
தற்போது மாநாடு படத்தின் ட்ரைலர் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. வரும் பக்ரீத் பண்டிகை(ஜூலை 21) அன்று மாநாடு படத்தின் ட்ரைலர் வெளியாகலாம் என்று படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். மேலும் மாநாடு திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாடு படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு யுவன் இசையமைத்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். மலையாள நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.