அடுத்தடுத்து நாவல்களை படமாக்கி வரும் வெற்றிமாறன்.. அடுத்த நாவல் யாருடையது தெரியுமா !

Date:

நாவல்கள் மற்றும் சிறுகதையை மையமாக வைத்து தனது படங்களை இயக்குனர் வெற்றிமாறன் எடுத்து வெற்றிப்பெற்று வருகிறார்.

தமிழ் திரையுலகில் சில படங்களே இயக்கினாலும் வெற்றி இயக்குனராக சாதனை படைத்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். தனுஷின் ‘பொல்லாதவன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கி வெற்றிப் பெற்றுள்ளார். இவர் இயக்கிய ஐந்து படங்களும் சூப்பர் ஹிட்டடித்துள்ளன.

சமீபகாலமாக அவர் இயக்கி வரும் திரைப்படங்கள் நாவல்களை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகிறது. ஏற்கனவே தனுஷ் நடிப்பில் உருவான ‘அசுரன்’ திரைப்படம் பூமணி எழுதிய வெட்கை என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டது. விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. இதையடுத்து தற்போது சூரி வைத்து இயக்கி வரும் விடுதலை திரைப்படமும் பல ஆண்டுகளுக்கு முன்பு வார இதழ் ஒன்றில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி வெளிவந்த ‘துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது.

இந்நிலையில் ‘விடுதலை’ படத்தை முடித்து சூர்யா வைத்து ‘வாடிவாசல்’ படத்தை இயக்க இருக்கிறார் வெற்றிமாறன். இந்த படத்தின் கதை சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலை தழுவி எடுக்கப்படுகிறது. இந்த படத்தின் கதைக்கருவாக ஜல்லிக்கட்டு மாடுகள் மற்றும் அதன் பின்னணி இருக்கும் என கூறப்படுகிறது. இதேபோன்று தனது அடுத்த படங்களையும் நாவலில் வரும் கதைகளை வைத்தே எடுக்க திட்டமிட்டுள்ளராம் வெற்றிமாறன்.

spot_imgspot_img

More like this
Related

ஓமானிலிருந்து ‘தூக்கி வரப்பட்ட’ பிரபல குண்டர் தலைவன்!

மட்டக்குளியில் பல கொலைகள் மற்றும் கொலை முயற்சிகளில் ஈடுபட்ட, குறிப்பாக சஞ்சீவ...

பசிலின் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக்...

கிளிநொச்சியில் புலிகளின் முகாமா?: அரசு விளக்கம்!

பளை (Palai) வனப்பகுதிக்குள் புலிகள் இயக்கத்தின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்