கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவுன் உறுப்பினரான தெல் பாலா என்று அழைக்கப்படும் கருப்பையா பாலன் என்பவரின் மகள் பொலிஸ் விசேட அதிரடைப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 50 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கருப்பையா நிர்மலா (41) என்பவரே கைதாகினார்.
சந்தேக நபரின் தந்தையான தெல் பாலா என அழைக்கப்படுபவர் இலங்கையில் பல குற்றங்களைச் செய்ததுடன், 15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருந்தார். அவர் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இறந்துவிட்டார் என்று பொலிஸார் கூறினர்.
இந் நிலையில் தற்சமயம் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1