ஏ.சி.முகில் இயக்கியுள்ள ‘பொன் மாணிக்கவேல்’ படத்தில் காவல்துறை உதவி ஆணையராக நடித்துள்ளார் பிரபுதேவா. தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஐஜியாக இருந்த பொன் மாணிக்கவேலின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
நிவேதா பெத்துராஜ், மறைந்த இயக்குநர் மகேந்திரன், பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், ‘பாகுபலி’ பிரபாகர் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.பொன் மாணிக்கவேல்’ படம் தயாராகி நீண்ட மாதங்கள் ஆகின்றன. பலமுறை வெளியீடு அறிவிக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இந்தப் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடப் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1