27.6 C
Jaffna
March 28, 2024
இந்தியா உலகம்

இந்தியாவில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படவில்லை: அமெரிக்க நாளிதழுக்கு மத்திய அரசு கண்டனம்!

இந்தியாவில் கொரோனாவுக்கு 42 லட்சம் பேர் பலியாகிவிட்டனர் என செய்தி வெளியிட்ட அமெரிக்க நாளிதழுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க நாளிதழான நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் இந்தியாவில் கொரோனாவுக்கு மூன்று லட்சம் பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவிக்கிறது. உண்மையில் 42 லட்சம் பேர் வரை பலியாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

பலி எண்ணிக்கையை இந்திய அரசு மூடி மறைக்கிறது என செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்தும், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் வழிகாட்டுதல்களின் படி கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பதிவு செய்து வருகின்றன. மாவட்ட வாரியாக பலி எண்ணிக்கை தினமும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் கொரோனாவுக்கு 42 லட்சம் பேர் இறந்துவிட்டதாக எந்த ஆதாரமும் இன்றி கற்பனையின் அடிப்படையில் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு இந்திய அரசு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

Pagetamil

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

Pagetamil

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Pagetamil

Leave a Comment